பிராமணன் - என்ற சொல்லைப் பயன்படுத்துவது சரியா? அது தமிழ்ச் சொல்லா?
பிரமன் - படைப்புக்குரிய கடவுள் என்று குறிப்பது தவறு. பிரமன் - என்ற சொல்லே தமிழில் இல்லை. பதினெண் சித்தர்கள் பிற + மண் = பிறமண் = இம்மண்ணுலகில் பிறப்புக்குக் காரணமான கடவுள் என்பதாகும்.
பிராமணர்கள் என்று வழக்காற்றில் உள்ள சொல்லைப் பிற + மண்ணினர் = பிறாமணர் = அயல் நாட்டவர் = அன்னியர் என்று குருபாரம்பரியத்தில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. பிராமணர் என்று தவறாகக் குறிப்பதோடு மட்டுமல்லாது பிரமனின் வாரிசுகள் என்று தங்களைக் குறித்துக் கொள்வது மிகவும் கேலிக்குரிய ஒன்றாகும்.