இந்துமதம் - ஹிந்துமதம் விளக்கக் கட்டுரைத் தொடர் - 6
பதினெண்சித்தர்கள் இந்த மண்ணுலகம் ஒரு நூறு கோடியாண்டுக் காலம் நெருப்புக் கோளமாக இருந்த பிறகு, ஒரு நூறு கோடியாண்டுக் காலம் பனிக்கட்டியாக இருந்தது என்றும்; அதன் பிறகே ஒரு நூறு கோடியாண்டுக் காலம் நீராக இருந்தது என்றும்; பின்னரே ஒரு நூறு கோடியாண்டுக் காலத்தில் கல்லும், மண்ணும் தோன்றியதென்றும்; இறுதியாக ஒரு நூறு கோடியாண்டுக் கால இடைவெளியிலே பயிரினங்களும், உயிரினங்களும் தோன்றினவென்றும்; இந்த மண்ணில் தோன்றிய அனைத்துப் பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஈசர்களாக அதாவது தலைவர்களாக, மணீசர்கள் தோன்றினார்கள் என்றும்; அவர்களைப் பண்படுத்துவதற்காகவே இந்துமதம் இன்றைக்கு 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கப் பட்டதுவென்றும் மிகத் தெளிவாகக் கூறுகிறார்கள்.
அதாவது, பதினெண்சித்தர்கள் மிகத் தெளிவாக விஞ்ஞானச் சூழலிலும், பகுத்தறிவுப் போக்கிலும், (With a Scientific atmosphere and a Rationaistic Approach) உலகின் தோற்றத்தையும், பயிரின உயிரின தோற்றத்தையும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பகுத்தறிவுப் போக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதுதான் சித்தர்களின் இந்து மதம். அதாவது, மெய்யான இந்துமதம் என்று சொல்லப் படும் பதினெண்சித்தர்களின் இந்துமதம் முழுக்க முழுக்க அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய ஒரு சமூக விஞ்ஞானமே; இது ஒரு பகுத்தறிவுத் தத்துவமே; இது ஓர் அறிவியல் மதமே.
ஆனால், வட ஆரியர்களின் ஹிந்துமதம் காட்டு மிராண்டித் தனமான கற்பனைகளையும், ஆபாசங்களையும், பொய்களையும், பயனற்றவைகளையும், தேவையற்றவைகளையும் மிகுதியாக உடைய ஒன்று. இப்பேருண்மையினை ஹிந்து மதத்தின் அதாவது பிறாமண வேத மதத்தின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
உலகம் பற்றியும் உயிரினம் பற்றியும் ஹிந்து மதம் கூறுவன:
‘பிரமன் தன்னால் தோற்றுவிக்கப் பட்ட மானஸ புத்திரர்களால் சிருஷ்டித் தொழில் நடக்காததால் பிரம்மனே சுவயம்பு மனு எனும் ஆணாகவும், சத்ரூபை எனும் பெண்ணாகவும் உருவெடுத்து மனித இனத்தை உருவாக்கினான். இவ்வாறு சிருஷ்டி தொடங்கியது’
இப்படி அறிவுக்குப் புறம்பான கற்பனைக் கட்டுக் கதைகளைக் கூறுகிறது பிறாமணர்களின் பொய்யான ஹிந்துமதம்.
முடிவுரை:-
குருதேவர் தரும் செய்திகள் அனைத்தும் சிந்தனையைத் தோற்றுவித்து ஊக்குவிக்கும் ஆற்றலுடையவையே! (Our Guru’s ideas are thought provoking) என்பதை அனைவரும் மெய்யாக்க வேண்டும். தலைவர் என்பவர் அறிவுணர்ச்சி ஊற்றாகக் (The Spring of Inspiring Ideas) கருத்துக்களை வழங்கிக் கொண்டே இருந்தால்தால் எங்கும் கொள்கை செழித்துக் கொழித்துப் பசுமையாக வளர்ச்சி பெற முடியும்.
தன்னல வெறி பிடித்த சமய, சமுதாய, கலை, இலக்கிய, அரசியல்வாதிகள் போலியான ஹிந்து மதத்தின் மூலம் மக்களை மடையர்களாகவும், தன்மானம் அற்றவர்களாகவும், தன்னம்பிக்கை யற்றவர்களாகவும், ஒற்றுமையில்லாதவர்களாகவும், சிந்தனை இல்லாதவர்களாகவும், எவ்விதமான மொழிப்பற்றோ, நாட்டுப் பற்றோ பெற்றுவிட முடியாதவர்களாகவும், கோழைகளாகவும், ஏமாளிகளாகவும், அடிமைகளாகவும் தயாரித்துத் தாங்கள் சுக வாழ்வு வாழுகிறார்கள். எனவே, இன்றுள்ள சமய, சமுதாய, கலை, இலக்கிய, அரசியல் தலைவர்கள் அனைவருமே நம்மைத் தாழ்த்தவும், வீழ்த்தவும், இழிக்கவும், அழிக்கவும், இருட்டடிப்புச் செய்யவும், பிறாமணர்களோடு சேர்ந்து செயல்படுபவர்களாகவே இருக்கிறார்கள். எனவேதான், நமது உடனடி முயற்சியாக மெய்யான இந்துமதத்துக்கும், பொய்யான ஹிந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கி உரைக்கப் பட்டு வருகின்றது.