Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
  • சிறு தெய்வங்கள் - பகுதி 3.
  • சிறு தெய்வங்கள் - பகுதி 3.

    சிறு தெய்வங்கள் - பகுதி 3.

    கி.பி. 785இல் 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அருளாட்சி அமைப்புப் பணியை மேற்கொண்டார்.

    இவர் கண்டதும் விண்டதும்:

    1. இவர் வட ஆரியர்களின் வேதமத மாயையிலிருந்தும், சமசுக்கிருத மொழியின் பிடியிலிருந்தும் அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களையும் விடுவிப்பதால்தான் அருளாட்சி அமைக்க முடியும் என்று கண்டறிந்தார். இப்பேருண்மையினை விண்டுரைத்திட சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்களை உருவாக்கி காவல் தெய்வங்களைப் புத்துயிர்ப்புச் செய்யும் பணியைச் செய்திட்டார். அதாவது, கிராமங்கள், நகரங்கள் முதலியவற்றின் எல்லைத் தெய்வங்களுக்குக் குருதிப்பலியும், இறைச்சிப் படையலும் வழங்கி பதினெண் சித்தர்களின் பூசாவிதிப் படி அருளூறு எழுத்துக்களையும், வாசகங்களையும், வாக்கியங்களையும், ஆணைகளையும் பயன்படுத்தி காவல் தெய்வங்களின் கருவறைகளில் அருளூற்றெடுக்கச் செய்திட்டார்.

    2. கருவறையின் மேலே நெடிதுயர்ந்த கோபுரங்களைக் கட்டும் கருவறைப் புரட்சித் திட்டத்தைச் செயலாக்குகிறார். இதன்படி முதன்முதலாகக் கட்டப்பட்டது தஞ்சைப் பெரிய கோயில். கங்கை கொண்ட சோழபுரம், திருபுவனம் கோயில் …. உள்ளிட்ட 48 வகையான கோயில்களை வரைபடத்துடன் செப்புத் தகடுகளுடன், மரச்சிலைகளுடன் தயாரித்துச் செயலாக்கும் திட்டத்தையும் வழங்கினார்.

    3. ஆலயங்கள் புத்துயிர்ப்புப் பெறுவதற்காகத் தனது தேவியர் 240 பேரையும், தனது அடியான்களிலும், அடியாள்களிலும், அடியார்களிலும் ஆர்வமுடைய எண்ணற்றோர்களையும் அவரவர் விருப்பப் படி காவல்தெய்வ ஆலயக் கருவறைகளில் அருவுருவச் சமாதியில் நிறையச் செய்திட்டார்.

    குருதி முழுக்காட்டுகளாலும், குருதி அவிர்பலிகளாலும், இறைச்சிப் படையல்களாலும், முத்தீ ஓம்பலாலும், ஐந்தீ வேட்டலாலும் காளிகள், கருப்பழகிகள், காடேறிகள், காட்டேரிகள், மாடேறிகள், மோகினிகள், இடாகினிகள், இயக்கிகள், மாசாக்கிகள், பேச்சிகள், காத்தாயிகள், கருப்பாயிகள், முத்தாலம்மன்கள், அங்காளம்மன்கள், பகவதியம்மன்கள், வீரமாக்கள், ஆண்டிச்சிகள், கன்னிகள், கண்ணிகள், நீலிகள்,….. முதலிய எண்ணற்ற வகையான பெண் தெய்வங்களும், ஐயனார்கள், காரணமூர்த்திகள், இலாட சன்னாசிகள், கருப்பண்ண சாமிகள், முத்தையாக்கள், முனீசுவரர்கள், வீரன்கள், சூரன்கள், வளியூரான்கள், உத்தண்டராயர்கள், பெத்தாரண்கள், (போத்தாரண்கள்), பத்தாரண்கள், புத்தாரண்கள், முத்தாரண்கள், சீவன்முத்தாரன்கள், சித்தியாரண்கள், கருப்புக்கள்…. முதலிய ஆண் தெய்வங்களையும், காவிரிக் கரையையும், வைகைக் கரையையும் ஒட்டி விரிந்து புத்துயிர்ப்புச் செய்தார். இப்படிப் புத்துயிர்ப்புச் செய்த காவல் தெய்வங்கள் மூலம்தான் மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கி ஆயிரமாயிரம் அடியான்களை, அடியாள்களை, அடியார்களை உருவாக்கித் தென்னிந்தியா முழுவதும் அருட்படையைத் திரட்டினார். அதன்மூலமே அருட்பேரரசை உருவாக்கினார்.

    இந்தக் காவல் தெய்வங்களின் அருட்கொடையால்தான் முதலாம் இராசராசன் இந்தியத் துணைக் கண்டத்தையும் கடந்து பல வெளிநாடுகளிலும் தனது வெற்றிகளை நிலைநாட்டி உலக அருட்பேரரசை நிலைநாட்டினான். ஆனால், பிறமண்ணினரான பிறாமணர்கள், தங்களின் வேதமதத்தையும், சமசுக்கிருதத்தையும் நுட்பதிட்பமான சதிச்செயல்களின் மூலம் பிற்காலச் சோழப் பேரரசுக் குடும்பங்களில் செல்வாக்குப் பெறச் செய்திட்டனர். இம்மாபெரும் வீழ்ச்சி நிலைமை தஞ்சைப் பெரிய கோயிலைப் பிறாமணர்களிடம் ஒப்படைத்த இராசராசனின் செயலே வெளிப்படுத்தியது. அத்தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் காவிரியாற்றங்கரைக் கருவூறார் உணர்ந்தார். அதாவது குருகுலத்தார் போல் அரசகுலத்தார் இந்துமத ஏட்டறிவிலும், பட்டறிவிலும், பயிற்சியிலும், முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபடுமாறு சட்டம் செய்யாததுதான் அரசகுலம் வட ஆரியருக்கு அடிமைப்பட நேர்ந்தது காரணமாகும். ஆனால், மலைப் பாம்பென வட ஆரியர்கள் விழுங்க ஆரம்பித்திட்ட அரச குடும்பத்தாரை அவரது ஆத்திரமும், முன்கோபமும், அவசரமும், பொறுமை யிழப்பும் காப்பாற்ற முடியாமல் செய்து விட்டன. அவர், தமது தவப்புதல்வனான கருவூர்த் தேவரை அழைத்து அனைத்து வகையான இலக்கியங்களையும் பாதுகாப்பதற்கு வேண்டுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறிவிட்டு தனது பொன்னிறப்பாவை தேவியரோடு பல்லவ குல தேவியரிருவர் முன்னும் பின்னும் விளக்கேந்திச் செல்ல நிலவறைக்குள் சென்று நிறைந்துவிட்டார்.

    கருவூர்த் தேவரோ அருளாட்சி மலர்ச்சி வளர்ச்சிப் பாதுகாப்பிற்காக தமது தந்தை திட்டமிட்டுக் கொடுத்துச் சென்ற 48 கோயில்களைக் கட்டும் பணியிலும், அனைத்து வகையான இலக்கியங்களை நகலெடுத்துப் பாதுகாக்கும் பணியிலும் பெரும்பொழுதைச் செலவிட்டார். எனவே, அருட்பயிர் விளைவிக்கும் அடியான்கள், அடியாள்கள், அடியார்கள் உருவாவது தடையேற்பட்டு விட்டது. காவல் தெய்வங்களின் ஆலயங்களில் அருளூற்றுக் கண்கள் அடைபட்டு விடாமல் பாதுகாக்கும் பணியும் தடைபட்டு விட்டது.

    வட ஆரியர்கள் தங்களது கட்டழகு மேனிகளாலும், சதித் திட்டங்களாலும், சமசுக்கிருதம் எனும் நஞ்சாலும், வேதமதமென்னும் வலையாலும் பதினெண் சித்தர்களின் இந்துமத அருளாளர்களையும், அருள் ஊற்றுக்களையும் மயக்கி, நஞ்சிட்டு, வலையில் பிடித்து …. அழித்திட்டார்கள். தமிழர்கள் மீண்டும் தங்களின் காவல் தெய்வங்களின் ஆலயங்களிலிருந்து சத்திகளையும், சித்திகளையும் பெறுவதில் தடையேற்பட்டு விட்டது …. வீழ்ச்சி பெற்று விட்டது.

    இப்பொழுது மீண்டும் அருளாட்சி அமைப்புப் பணி துவங்கி-யுள்ளதால் மீண்டும் காவல் தெய்வங்களின் ஆலயங்களைப் புத்துயிர்ப்புச் செய்யும் பணி விரிந்தும் விரைந்தும் துவக்கப் பட்டுள்ளது. கிராமங்கள், குக்கிராமங்கள், பட்டிதொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள் என்ற வேறுபாடின்றி நமது அடியான்களும், அடியாள்களும், அடியார்களும், பதினெண் சித்தர்களின் பூசா விதிப்படி அனைத்துக் காவல் தெய்வங்களையும் புத்துயிர்ப்புச் செய்யும் பணியினை வெற்றியுறச் செய்து அருளை அநுபவப் பொருளாக வழங்கி அருளாட்சி அமைப்புப் பணியை வெற்றிபெறச் செய்யுங்கள். இனிமேலும் வழிபடப்படும் கடவுள்களுக்குள் வேறுபாடு பாராட்ட வேண்டாம், எச்சரிக்கை!

    தொடர்புடையவை: