[21-12-1984இல் குருதேவர் தமது காரைக்குடி அடியான் திரு இராமானுசதாசு அவர்களுக்கு எழுதிய மடலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி.]
".... மூன்று உகங்களாகக் கொடிகட்டிப் பறந்த இந்துமதமும், கோலோச்சிய தமிழினமும், கலியுகத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த அன்னியரான (பிற+மண்ணினர் -> பிறாமணர்) பிறாமணரால் வீழ்ச்சியும் தாழ்ச்சியும் தொடர் ஆழ்ச்சியும் பெற்று விட்டன. இவற்றை விடுவிக்கப் பத்தாவது, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மிகத் தெளிவான செயல்திட்டங்களை வகுத்துக் குருவாக்குகளாக, குருவாசகங்களாக, குருபாரம்பரிய வாசகங்களாக, அரசபாரம்பரிய வாசகங்களாக, இலக்கிய பாரம்பரியங்களாக வடிவப்படுத்தினார்கள். இருவரும் முறையே சமுதாயவாதியாகவும் (The 10th Peedam was a Socialogist), அரசியல்வாதியாகவும் (The 11th Peedam was a Politician) செயல்பட்டுத் தோல்வியே பெற்றனர்.
எனவேதான், யாம் மிகத் தெளிவாகத் தத்துவவாதியாக (Philosopher), முழுமை மாற்ற முயற்சியாளனாக (Radicalist), பகுத்தறிவுவாதியாக (Rationalist), சித்தாந்தியாக (Theologist), அருளுலக விஞ்ஞானியாக (The Scientist of the Occult Sciences, Temple Sciences and Tantric Sciences), சமயநெறி வல்லுனராக (The Doctor of the Religious Doctrines and the Esoteric Doctrines), தெய்வீகக் கலைஞனாக (The Mystic and an Artist of all kinds of Black Arts, Witchcrafts, Sorcery, Arts of Enchanting and Arts of the Ghosts), அருளாளனாக (The Divinator), சமயாச்சாரியாராக (The Sage, The Saint, The Preacher and Teacher of the Holy Principles, Policies, Rituals, Customs and Manners, Faiths and Beliefs, Facts and Fictions, Legends and Mythologies, Puranas and Ithihaasas, Holy hymns and Sacred Verses, Agamas and Vedas … etc), பாரம்பரியப் பைந்தமிழினத் தலைவனாக (The Hereditary Leader and Guide of the Tamilian Race), இந்துமதத் தந்தையாக (The Founder and the Father of The Induism), ஞானாச்சாரியாராக (The Propagator of the Learnings dealing with Ultimate Realities), மார்க்சீயச் சிந்தனையாளனாக (The Marxist), இலக்கியவாதியாக (Man of Literature), … உருவாக்கப் பட்டோம் எமது தந்தையால்.
அவரே தமது கடைசிக் காலத்தில் 'நான் எழுதி முடித்த வீர காவியம் நீ', 'இந்திய மண்ணில் என்றைக்குமே அருளுலக இருள் வராதபடி தோற்றுவிக்கப் பட்டுவிட்ட ஞானசூரியனே நீ', 'சமய சமுதாய அரசியல் கடுமைகளையும், கேடுகளையும், கொடுமைகளையும் முடிவுகட்டக் கூடிய முழுமைப் புரட்சிவாதியாக உருவாக்கப்பட்டவனே நீ', 'உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்க உருவாக்கப்பட்ட தலைமைச் சிற்பியே நீ', 'உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டை முழுமைப்படுத்த உருவாக்கப்பட்ட அருளாசானே நீ', ... என்று எண்ணற்ற புகழுரைகளைக் கூறிடுமளவுக்குத் தயாராகியுள்ளோம் யாம்.
இவற்றால்தான் யாம், மிகமிகத் தெளிவாக அச்சமோ, கூச்சமோ, ஆச்சரியமோ, மாச்சரியமோ, இச்சையோ, ... இல்லாமல் பதினெண்சித்தர் பீடாதிபதிகளும், மற்ற சித்தர்களும், ... அருளுலகக் கலைஞர்களும் 'எழுதாக் கிளவிகளாக' விட்டுச் சென்றுள்ள குருவாக்குகளையும், எழுதப்பட்டும் மறைத்துச் சென்றுள்ள 'மறை'களையும் (குறிப்பிட்டவர் மட்டுமே கற்கும் 'இரகசியங்கள்' = மறைகள்), எழுதப்பட்டு அனைவரும் வாசித்திடுமாறு விட்டுச் சென்றுள்ள குருவாசகங்களையும், முறையான தொடர் வரலாறுகளாகப் பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்கு மட்டுமே உரியதாக (The Textbooks or Manuals of the Pathinensiddhar Peedaathipathis only) எழுதப்பட்ட குருபாரம்பரியங்கள் (Religious History), அரசபாரம்பரியங்கள் (Political History), இலக்கிய பாரம்பரியங்கள் (History of Language and Literature), ... முதலியவைகளையும் அப்படியே முழுமையாகச் செயலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இதற்காகவே, 'வெளியே கூறினால் பாவம்; தலைவெடிக்கும்; ஆயிரம் காராம் பசுக்களைக் கொன்ற பாவம் வரும், ...' என்ற கண்டிப்பு அச்சுறுத்தல்களையும் நுட்பமாக வென்று பெரும் பகுதிக் கருத்துக்களை அப்படியே எழுதி, கூறி, அச்சிட்டுச் செயல்படுகிறோம் யாம். இதில் ஏமாற்றோ, வஞ்சகமோ, சூழ்ச்சியோ, பித்தலாட்டமோ, ஒருதலைச் சார்போ, விதிவிலக்கோ, ... இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை. புரிந்து செயல்படுக!
ஒரு மாபெரும் அருட்புரட்சியால் 'தனிமனித விடுதலை', 'குடும்ப விடுதலை', 'மொழி விடுதலை', 'சமுதாய விடுதலை', 'இன விடுதலை', 'பண்பாட்டு விடுதலை', 'நாட்டுரிமை விடுதலை', ... முதலிய பல விடுதலைகளைப் பெறுவதற்காக அருட்படை திரட்டும் 'மதவழிப் புரட்சித் தலைவனே நான்'. 'நானோர் தத்துவப் புரட்சி நாயகன்'. எனக்கு உலகியலாக அழிவு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே என்னை மூன்று மாதப் பச்சிளங் குழந்தைப் பருவத்திலிருந்தே நவநஞ்சுகளை ஊட்டி 'நஞ்சுண்ட மேனியனாக' வளர்த்தார் புரட்சிச் சிந்தனை மேதையான என் தந்தை. ..."