Gurudevar-yaar
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் யார்?>
  • குருவாணையுணர்தல்
  • குருவாணையுணர்தல்

    குருவாணையுணர்தல்

    குருதேவர் தம்மைப் பற்றிய விளக்கங்களை கூறும் கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பட்ட தொகுப்புக் கட்டுரை.(10.2.1984 அன்று குருதேவர் எழுதிய ‘குருவாணை யுணர்தலும் உணர்த்தலும்’ என்ற கட்டுரை அஞ்சலில் இருந்து எடுக்கப் பட்ட பகுதிகள்.)

    “... Gurudevar Blessing குருதேவர் நெடிய, பெரிய, அரிய பதினெண்சித்தர் பீடாதிபதியின் விந்துவழி வாரிசு; அருளுலகக் கலைகளிலும், அறிவியல்களிலும் முழுமையாகத் தேர்ந்தவர்; நூற்றுக்கணக்கான சமாதுகளில் இருந்தும் நிறைந்தும் மறைந்தும் வெளிவந்தவர்; ஒன்பது வயதின் எல்லையிலேயே உடலை விடுத்து ஓராண்டுகால இடைவெளியில் அண்டபேரண்டங்கள் அனைத்தும் சுற்றித் திரும்பியவர்; மூன்று உகங்களையும் பிறப்பால், ஞானத்தால், அருளால் முழுமையாக உணர்ந்தவர்; இந்த உகத்து விடிவுக்காக இராசிவட்ட நிறைவுடையாராக, ஆத்தாள் அமளிகையாக, பராசத்தி திருவடியாக, பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திரு அவதாரம் செய்திருக்கிறார்;

    ‘பதினெண்சித்தர்களின் கொள்கையான உலக ஆன்மநேய ஒருமைப்பாடு, சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் முதலியவற்றின் அடிப்படையில் அன்பு வழியில், அமைதி வழியில், அற வழியில், அருள் வழியில், மென்மை வழியில், சமாதான வழியில் … உலக ஒற்றுமையையும் அமைதியையும் மகிழ்வையும் நிறைவையும் … நிலைநாட்டல்’; ‘அருளாட்சியைப் பொருளுலக இன்னல்களையும், இருள்களையும், இயலாமைகளையும், இல்லாமைகளையும், தவறுகளையும் … முழுமையாக அகற்றிடச் செயலாக்கல்’; ‘அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்குதல்’; … முதலியவைகளை நிறைவேற்றிடத் தமது பதினெட்டாண்டு பயிற்சிகளாலும், பதினெட்டாண்டு முயற்சிகளாலும் செயலாக்கும் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார்;

    இந்து மறுமலர்ச்சி இயக்கமும், அருளுலக ஆர்வலர் கழகமும் முழுவெற்றி பெறத் தம்மை இம்மண்ணுலகின் முதல் அரசயோகியாகவும், அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாகவும் உருவாக்கி மாபெரும் சாதனை புரிந்திருக்கிறார்; உலகம் முழுதுமுள்ள அருளாளர்களின் ஒத்துழைப்பையும், நம்பிக்கையையும் பெற்ற உலக அருளாட்சித் தலைவராக விளங்குகிறார்; உலக மாபெரும் மார்க்சீயச் சிந்தனையாளரால் வளர்க்கப்பட்ட பகுத்தறிவுவாதியாக விளங்குகிறார்; இன்றைய உலக அருளாளர்களால் இந்துமதத் தந்தையாக, குருமகா சன்னிதானமாக, ஞாலகுரு சித்தர் கருவூறாராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்;

    சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் தொழில் … துறைகளின் நடவடிக்கைகளை இரண்டறக் கலந்த நிலையில் உணர்ந்து ஆக்கப்பணிகளை அருள்வழியில் ஆற்றி வருகிறார்; உலகப் புத்தமத அமைப்புக்களில் பலவும், கபாலிகர், காளாமுகர், சாத்தர், நிர்வாணத் துறவிகள், சித்தியாளர்கள், … முதலியோரின் அமைப்புக்களும் தங்களின் தத்துவ நாயகராக, வழித்துணையாக ஏற்றுள்ளவராகவும் இருக்கிறார்; …;

    “... யாம் சகதிக்குள்ளிருக்கும் புழுவாக, மலைமுகட்டுத் தேன்கூட்டுத் தேனீயாக, கோபுரத்துக் கிளியாக, அடர்காட்டு வேங்கையாக, மலைச்சாரல் களிறாக, இல்லத்துப் பசுவாக, மாடப்புறாவாக, சோலைக்குயிலாக, சாலையோரத்துப் பசிப்பிணியாளனாக, மலைமுகட்டுத் தவசியாக, தத்துவச் சித்தாந்த வேதாகம வித்தகராக, போர்த் தளபதியாக, சிறந்த கப்பலோட்டியாக, ... எல்லா நிலைகளிலும் தோய்ந்து ஆய்ந்து உணர்ந்து தெளிந்தவரே யாவோம்.

    எனவே, முதலாவதாக மொழி இனம் நாடு எனும் முக்கோட்டை விடுதலையும், தன்னாட்சியும், உரிமை ஆட்சியும் பெறுவதற்காகவும்; இரண்டாவதாக அனைத்து மக்களும் இயற்கையின் விளைச்சல்களையும், மனிதனின் சாதனைகளையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளவும்; மூன்றாவதாக யாரும் யாரையும் எதன் பெயராலும் எதன் துணையாலும் அடிமைப்படுத்தாமல் இருக்கவும் … முழுமூச்சாகப் போராட எல்லாவிதத் தரங்களையும், திரங்களையும், தீரங்களையும், பயிற்சிகளையும் … பெற்றுச் செயல்நிலையில் உள்ள சிலரில் யாமும் ஒருவரே …”

    இந்துமதத்துக்காக நாற்பத்தெட்டுப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் நாற்பத்து மூன்று இலட்சம் ஆண்டு பரந்த காலவெளியில் தோன்றுவார்கள். இவர்களே, காலவேகத்தாலும், கருத்து மாற்றங்களாலும், மானுடக் கற்பனைகளாலும், பிற தவறுகளாலும் இந்துமதத்துக்கு ஏற்படக் கூடிய எல்லாக் குறைகளையும், கறைகளையும், தேக்கங்களையும், மயக்கங்களையும், தளர்ச்சிகளையும், அயர்ச்சிகளையும் … அகற்றுவார்கள். அதாவது, அருளை அநுபவப் பொருளாக வழங்குவார்கள். மனிதர்களில் 48 வகையான அருளாளர்களை உருவாக்குவார்கள்; மனிதனை 48 வகையான வழிபாட்டு நிலையினருக்கும் அறிமுகப் படுத்துவார்கள்; 48 வகையான ஆச்சாரியார்களை உண்டாக்குவார்கள்; 48 வகையான வழிபாட்டு நிலையங்களை உண்டாக்குவார்கள்; 48 வகையான அருட்கலைகளை வழங்குவார்கள்; விண்ணிலுள்ள ஒன்பது கோள்களும், பன்னிரண்டு இராசிகளும், இருபத்தேழு மீன்களும் ஆகிய நாற்பத்தெட்டும் நிகழ்த்தும் ஆட்சியைக் கட்டுப்படுத்திடும் பரிகாரங்களைச் செய்வார்கள்; ‘விண்ணையும் மண்ணையும் இணைப்பார்கள்’;

    குருபாரம்பரியம்:-1. கருவாக்கு, 2. கருவாசகம், 3. குருவாக்கு, 4. குருவாசகம், 5. தருவாக்கு, 6. தருவாசகம், 7. திருவாக்கு, 8. திருவாசகம், 9. அருள்வாக்கு, 10. அருள்வாசகம், 11. மருள்வாக்கு, 12. மருள்வாசகம் (இவை பன்னிரண்டும் அருளுலகை ஆட்சிபுரியும் “இராசிகள் பன்னிரண்டு” எனப்படுபவை.) 13. சுருதிகள், 14. சூத்திறம், 15. சூத்திரம், 16. சூத்தரம், 17. பூசாவிதிகள், 18. குருமார் ஒழுக்கம் (சில ஏடுகளில் ‘குருமார் ஒழுகலாறு’ என்று பாடவேறுபாடு உள்ளது) (இவை ஆறும் ‘வேதாகம அங்கங்கள்’ எனப்படுபவை.)

    இந்துமதம் இப்பதினெட்டையே உள்ளீடாகவும், அடிப்படையாகவும் கொண்டு அமைந்திருக்கிறது. எனவே, இப்பதினெட்டும் பதினெண்சித்தர்களின் வாழ்வியலாக, செயல்வடிவமாக, தத்துவ முடிவாக, சித்தாந்த விளக்கமாக, வேதாந்தக் குறிக்கோளாக … இருக்கின்றன. இவற்றின் இயக்கமாகவே ஞாலகுரு, பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி இன்று செயல்படுகிறார்.

    பதினெண்சித்தர் பீடாதிபதிதான் 1. அறிவுரை, 2. அருளுரை, 3. அறிவார்ந்த அருளுரை, 4. அருளார்ந்த அறிவுரை என்ற நான்கினைத் தெளிவாக மக்களுக்கு வழங்குகிறார்கள். இதனால், எல்லா நாட்டினரும், இனத்தவரும், மொழியினரும் … தங்கள் தங்களின் முன்னோர்களோடு தொடர்பு கொண்டு அருளுலகப் பயன்களை அடையலாம். “சித்தர்நெறி எனும் இந்துமதம் முன்னோர்களின் வழிபாட்டையே கூறுகிறது”. (The Siddharism namely Induism preaches only the Ancestors’ Worships). எல்லா மொழிகளுக்கும் தமிழ்மொழியே தாய் என்பதால் தமிழ் மந்திறங்களை (Sacred Verses = பொதுவான அருள்வாசகங்கள்) எல்லா மொழிகளிலும் சொல்லிச் சித்தி பெற முடியும். இம்மண்ணுலகில் தோன்றும் அருளாளர்கள் அனைவரும் சித்தர்நெறி எனும் கனிமலர்த் தோட்டத்தில் கனிந்தவர்களே! பூத்தவர்களே! ஆதலால் எல்லா அருளாளர்களையும் வணங்கலாம்! வாழ்த்தலாம்! வழிபடலாம்! தொழுகை செய்யலாம்! கும்பிடலாம்! பூசை செய்யலாம்! …

    தொடர்புடையவை: