முகப்புப் பக்கம்>
11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
கருவூறார் கீதை.
கருவூறார் கீதை.
கருவூறார் கீதை.
- தமிழே தெய்வம்!
- தமிழே அருளுலகக் காவல் சத்தி!
- தென்னாடுடைய சிவனே போற்றி!
- எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
- பதினெண் சித்தர்களின் இந்துமதம் ஒரு வாழ்வியல் நெறி!
- அண்டபேரண்டங்களில் வாழும் விண்ணுலக மதமே பதினெண் சித்தர்களின் இந்துமதம்!
- பயிரினங்களையும் உயிரினங்களையும் நல வாழ்வு பெறச் செய்த முதல் மதமே இந்துமதம்!
- இம்மண்ணுலக அறிவுலக வரலாற்றின் விளக்கமே இந்து மதம்!
இம்மண்ணுலகில் தோன்றிய முதல் மனித இனமான தமிழினமே இந்துமத நாற்றங்கால்!
- இந்துமதமும் தமிழ்மொழியும் பிரிக்க முடியாதவை!
- தமிழில்லாத இந்துமதம் நீரில்லாத பயிர் போல் வாடிடும்!
- தமிழே உலக மொழிகளின் தாயென்பது போல் இந்துமதமே உலக மதங்களின் தாய்!
- தாய்மொழியொலி அடிப்படையிலுள்ள பூசாமொழி வாசகங்களே உலக அருள் வித்துக்கள்!
- தமிழர்களே என்றென்றும் அருளை விளைவிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பர்!
!. தமிழகம் இருண்டாலோ வறண்டாலோ அருளுலகில் தீயன செழித்திடும்!
- தமிழின மாட்சியே அருளுலக வளவளர்ச்சி!
- உலக மதங்களுக்குப் பீடாதிபதிகளின் கீதைகளே உயிரோட்டம்!
- தமிழையும் இந்துமதத்தையும் நம்பிட நான்கு யுக வரலாறுகள் புரிய வேண்டும்!
- தமிழர்களே நான்கு யுகங்களின் தலைவர்கள்!
- தமிழையும் இந்துமதத்தையும் அநுபவத்தாலேயே அறியலாம்! புரியலாம்!
- தமிழும் இந்துமதமும் விண்ணுலகக் கொடைகள்!
- தமிழும் இந்துமதமும் மண்ணுலகினரின் உயிரும் உடலுமாகும்!
- தமிழே அனைத்து அருட்சத்தி சித்திகளையும் வழங்க வல்லது!
- எக்காலத்தும் தமிழும் இந்துமதமும் மானுடரின் கண்களாகும்!
- தமிழின வழிபடு நிலையங்களும் வாசகங்களுமே உலக மதப் பிணைப்பும் இணைப்பும் காக்கும்!
- தமிழே மனித வாழ்வின் ஆரம்பத்தையும் முடிவையும் விளக்கிடும்!
- இந்து மதமே மனிதவாழ்வைப் பயனுடையதாக்கும்!