முகப்புப் பக்கம்>
11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
ஞானாச்சாரியாரின் போதனைகள்.
ஞானாச்சாரியாரின் போதனைகள்.
ஞானாச்சாரியாரின் போதனைகள்.
ஒரு வரிக் கருவாசகங்கள், குருவாசகங்கள், தருவாசகங்கள், திருவாசகங்கள், அருள்வாசகங்கள், மருள் வாசகங்கள், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராம் பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய நூல்களில் உள்ளன.
- தாய்மொழியே பெய்யும் மழை!
- தாய்நாடே உய்ய வைக்கும் தெய்வம்!
- பெண்ணில்லா வாழ்வு கண்ணில்லா வாழ்வு!
- மங்கையே உலகின் மங்கலம்!
- மாதென்பவள் மாதந்தோறும் மலரும் மலர்!
- யாதும் ஊரே யாவரும் கேளிர்!
- நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
- முன்னோர்களை ஆழ நினைத்து வழிபடலே வழிபாடு!
- மூத்தோர்களை மதித்துப் பேணுதலே மத வாழ்வு!
- மெய்ப்பொருள் காண்பது அறிவு!
- எல்லோரிடத்தும் இனிய கனிமொழி பேசுவதே வேதம்!
- கேடு செய்பவர்க்கும் நன்மை செய்வதே தவம்!
- குருவழி வாழ்வே அனைத்தும் தரும்!
- கட்டிய கோயில்கள் வெட்டிய அருள் ஊற்றுக்களே!
- தமிழுணர்வே அருளுணர்வு!
- தமிழறிவே அருளுலக அறிமுகம்!
- குருவழியே சித்தியனைத்தும் தரும்!
- தமிழின் பெருமையே தமிழர் பெருமை!
- தமிழே இந்து மதம்!
- தமிழ்ப் பற்றே தமிழின ஒற்றுமை!
- தமிழின ஒற்றுமையே இந்து மதம் காக்கும்!
- தமிழ் மொழியின் வளவளர்ச்சியே தமிழினச் செழிச்சி!
- தமிழின மொழி நாடு காக்கவே கோயில் பூசை!
- தமிழே அன்பு தரும்! தமிழே இன்பம் தரும்! தமிழே அமைதி தரும்! தமிழே பத்தி தரும்! தமிழே சத்தி தரும்! தமிழே சித்தி தரும்! தமிழே முத்தி தரும்!
- தமிழின உயிரே இந்து மதம்!
- பதினெண் சித்தர்களின் அருளார்ந்த அறிவுக் கொடையே இந்து மதம்!
- இந்து மத மறுமலர்ச்சியே தமிழின மொழி நாட்டு மறுமலர்ச்சி!
… … … … …
இவை போன்ற வாசகங்கள் மற்ற நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன.