Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • தமிழரின் அறிவியல் சாதனைக்குச் சான்று
  • தமிழரின் அறிவியல் சாதனைக்குச் சான்று

    தமிழரின் அறிவியல் சாதனைக்குச் சான்று

    தமிழ் நாட்டுச் சமயத் துறையில் 'சித்தியார்' நிலையை அடைந்தவராகக் கருதப் படும் மாணிக்க வாசகர், சைவ சமயக் குரவர் நால்வருள் முதல்வர். இவரது காலம், களப் பிறர்களின் ஆட்சித் துவக்கமாகிய கி.பி. முதலாம் நூற்றாண்டு ஆகும். அவர் வழிபட்ட இடங்கள் முதலிய சான்றுகளால் அவரே, வரலாற்றுப் படி கிடைத்துள்ள சமயவாதிகளில் முதல்வர்.

    இவர், சித்தர்களின் கருத்துக்களையும், வழிவழி வந்த சமயக் கருத்துக்களையும், தெய்வீக நிலைகளையும் .... முழுமையாக உணர்ந்து பாடியுள்ளார். அப்படி அவர் பாடுவதில், டார்வின் 'மனித உடல், ஓருயிர்ப் பிராணியிலிருந்து வளர்ந்து, குரங்காகிப் பின் மனித நிலையை அடைந்தது' என்று கண்டறிந்த உண்மை காணப் படுகின்றது. அத்துடன் இவர் 'மனித உடல் மட்டுமின்றி, உயிரும் இந்தப் படிப்படியான மாற்றங்களைப் பெற்றிட்டது' என்றதோர் அரிய உண்மையையும் வெளியிடுகின்றார்.

    “புல் ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரம் ஆகிப்
    பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பு ஆகி
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத்தாவரச் சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்…..”

    மாணிக்க வாசகர் இப்படி 'உயிர்கள் பல பிறப்புக்கள் எடுத்து, மனித நிலையை அடைந்தது' என்பதைத் தெளிவாக விளக்கி யுள்ளார்.இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டவைதான்  'நாடி சோதிடம்', 'பிறப்பியல்', 'அங்கவியல்', 'மனையியல்', 'பெயரியல்', 'வரியியல்', 'எண்ணியல்', .... முதலிய இன்னோரன்ன பிற கலைகள்.


    தொடர்புடையவை: