கேள்வி: இன்றைய அரசியல் வாதிகளால் நாடு உருப்படுமா?
பதில்: ஆன்மீக உணர்வோ, அறிவோ, பற்றோ, பிடிப்போ, நம்பிக்கையோ, ஈடுபாடோ, மரியாதை உணர்வோ இல்லாத அரசியல்வாதிகளே அதிகமாக இருப்பதால் அவர்கள் எல்லாவிதமான பொய், களவு, கையூட்டு, வஞ்சகம், பழிக்குப் பழி வாங்கல், கொள்ளையடித்தல், யாரையும் விரோதியாக்கிக் கொள்ளல், சமுதாய ஒழுக்கங்களை மதிக்காமல் வாழுதல்…. முதலிய பல தவறுகளை எவ்வித தயக்கமுமின்றி தாராளமாகச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளே நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்பதால் அரசியல்வாதிகளால் நாட்டிற்குப் பயனில்லை. இதுபற்றி இருக்கு வேதம், குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், அரசபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், இந்துமத ஆறு அங்கங்கள் எனப்படும் நேமம், நியமம், நிடதம், நிட்டை, நீதி, விதி…. முதலியவற்றில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன.