பேரின்பமும் சிற்றின்பமும்
“….. இந்தப் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள்; இம்மண்ணுலகில் முதல் மதமும், மூலமதமும், தாய் மதமுமான பதினெண் சித்தர்களின் சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் இந்துமதம் என்றென்றும் சிதைந்து, சிக்கலுற்றுச் சின்னாபின்னப் பட்டுக் கிடப்பதற்காக; அண்ட பேரண்டமாளும் அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தமிழ் மொழியில் உள்ள பேரின்பம் என்ற சொல் ஆணும் பெண்ணும் கூடி வாழும், இல்லற வாழ்க்கைக்கு உரியது என்பதை மாற்றி; அச்சொல் மண், பெண், பொன் முதலியவற்றால் விளையக் கூடிய இன்பம் அனைத்தையும் இழித்துப் பழித்து ஒழிக்கும் தங்களுடைய வேதமதத்திற்குரிய துறவு வாழ்க்கைக் குரியதாக மாற்றி விட்டார்கள்.
இன்று சைவசமயம் என்று போற்றப்படும் இந்து மதத்திற்குரிய இலக்கியங்கள், இலக்கணங்கள், நிகண்டுகள், சூத்திறங்கள், பூசாமொழிகள், பூசாவிதிகள்…. முதலிய அனைத்துமே மிகத் தெளிவாக ‘பெண்ணின்பமே பேரின்பம்’ என்ற கருத்து விளக்கச் சொற்றொடரை வழங்கியும் கூட; அப்பாவித் தமிழர்கள் ஏமாந்தார்கள்.
இந்து மதத்தில் பெரும்பாலானவர்கள், பிறாமணர்களை நம்பிக் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், அறிவிருந்தும் மூடராய் மாறி விட்டார்கள்! மாறி விட்டார்கள்! மாறி விட்டார்கள்! அந்தோ! அந்தோ! அந்தோ! என் செய்வேன்! ஏது செய்வேன்! ….” என்று வருந்தி வருந்திப் புலம்பித் தமது குருபாரம்பரியத்தில் எழுதுகின்றார் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்.