Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • யாரையெல்லாம் வணங்கக் கூடாது?
  • யாரையெல்லாம் வணங்கக் கூடாது?

    யாரையெல்லாம் வணங்கக் கூடாது?

    கேள்வி:- யார் யாரை மெய்தோயத் தரையில் விழுந்து வணங்கக் கூடாது?

    பதில்:-

    1. கையில் உயிருள்ள பொருட்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

    2. சாத்திற தோத்திற நேத்திற அத்திற சூத்திற அறிவில்லாதவர்கள்.

    3. நாத்திகர்கள், போலி பத்தர்கள், புகழுக்காக பிறருக்கு உதவுபவர்கள், அறநெறியைப் புறக்கணிப்பவர்கள்.

    4. மிகுந்த சீற்றத்துடன் இருப்பவர்கள், கட்டுப்பாடில்லாமல் சிரிப்பவர்கள், குலுங்கிக் குலுங்கி அழுபவர்கள்.

    5. எண்ணெய் தேய்த்து நீராடிக் கொண்டிருப்பவர்கள்.

    6. பேராசைக் காரர்கள், பொறாமைக் காரர்கள், திருடர்கள், குடிகேடர்கள்.

    7. படுத்திருப்பவர்கள், போகத்தில் ஏக்கம் உள்ளவர்கள், உறக்கமில்லாதவர்கள்.

    8. பூசை செய்து கொண்டிருப்பவர்கள், உணவு உண்டு கொண்டிருப்பவர்கள்.