கேள்வி:- ‘குரு’ என்று குருதேவரைக் குறிக்கும் சொல் தமிழ்ச் சொல்லா?
பதில்:- ‘குரு’ - தமிழ்ச் சொல்லே. இதற்கும் ‘சமசுக்கிருதத்தி’ற்கும் தொடர்பே இல்லை. இதற்கான வேர்ச்சொல் (Root Word) தமிழில் இருக்கிறது. குரு = முளைப்பதற்குரிய முழுமையான கரு குருத்து; குருத்தோலை = கருவோலை (இளம் ஓலை, ஆரம்ப ஓலை) குருவி = மிகச் சிறிய ஆரம்பமான பறவையினம். இதுதான் முதலில் தோன்றிய பறவை யினம். இது அனைத்து பறவைகளுக்கும் பொதுப் பெயராக உள்ளது. குருந்தம் = அமைதியான, நிறைவான, முழுமையான பனிக்கட்டிப் போன்ற குளிர்ச்சியான, பரந்து எல்லையற்ற, விரிந்த, அனைத்துக்கும் மூலமான, முதலாக, ஒலியையுடைய எந்நேரமும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்ற தலைவனான இறைவன். குருந்த மரம் = எப்போதும் செழிப்பாக இருக்கக் கூடிய மரம்.குருந்த’’ மர நிழலில் குருமார்கள் கல்வி போதிக்கும் மரபுடையது பண்டைத் தமிழினம். குருதி = உடலில் ஓடுகின்ற செந்நீர் - இதுவே உயிர், இதுவே அனைத்துக்கும் ஆரம்பம், அடிப்படை, முதல்.