Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • சத்தி வழிபாடு பற்றி.
  • சத்தி வழிபாடு பற்றி.

    சத்தி வழிபாடு பற்றி.

    கேள்வி:- உண்மையான இந்துமதம் சத்தி வழிபாட்டையே கூறுவது ஆண் இனத்தைப் பழிப்பதாகாதா’

    பதில்:- இது தவறு. இயற்கைக் கூறுகளின்படி ஆணால்தான் ஓடியாடி எங்கும் திரிந்து செயல்பட முடியும். இவனே தலைவன், தலைமகன், முதல்வன். ஆனால், பெண்ணில்லாமல் இவனில்லை. பெண்ணடிமைத்தனம், இழிவு, பழி, கட்டுப்பாட்டுக் கொடுமை….. முதலிய பண்புகள் தலைதூக்கி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்டு இயற்கையின் கூறுகள், ஆற்றல்கள், மானுட உணர்வுகள், அறிவுகள், வாழ்வியல்கள்…. முதலிய அனைத்தும் பெண்களின் வழிபாடாக, பெண்களின் வழியாகச் செழித்து வளர்வனவாக ……. இந்துமதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இருவரும் சமமாகக் கருதப்படுவதே இந்துமதம்.