Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • கிருஹஸ்தாஸ்ரமம் - என்ன குழப்பம்?
  • கிருஹஸ்தாஸ்ரமம் - என்ன குழப்பம்?

    கிருஹஸ்தாஸ்ரமம் - என்ன குழப்பம்?

    ஜயேந்திர ஸ்வாமிகள், கிருஹஸ்தாஸ்ரமம் உள்ளவனால் எல்லா தர்மங்களையும் அடைய முடியாது என்று வேதம் சொல்கிறது என்கிறார். (ஆதாரம் ஜகத்குரு/ஜூலை/1984/பக்கம் 66) இதுதான் இந்துமதக் கருத்தா?

    பதில்: இது தமிழர்களின் மெய்யான இந்துமதக் கருத்தல்ல! இது வட ஆரியரின் வேத மதக் கருத்தேயாகும். வட ஆரியரின் வேதநெறிதான் இது!

    சங்கராச்சாரியார் மொட்டையடித்து காவியணிந்து துறவியாக வாழ்வதால் உண்மையான இந்துமதப்படி மதக் குருவாக இருக்க முடியாது. பிறருக்குத் திருநீறு கூடக் கொடுக்கக் கூடாது. அறுபதாண்டு அகவை முடியும் வரை இல்லறம் ஏற்றுப் பிறகு ‘நீத்தார்’, ‘துறவோர்’, ‘அந்தணர்’, ‘அறவோர்’, என்ற நிலையை அடைபவரே குருவாக, குருக்களாக (குருவாசகம் படிப்பவராக), குருமாராக (குருவாக்கு ஓதுபவராக) மதத் தலைமையை ஏற்கலாம். இல்லறமே நல்லறம். இதுதான் இந்துமதம்.