Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
  • பதினெண்சித்தர்களின் வானியலும் விண்ணியலும்
  • பதினெண்சித்தர்களின் வானியலும் விண்ணியலும்

    பதினெண்சித்தர்களின் வானியலும் விண்ணியலும்

    ‘விண்ணியல்’ (The Universe = அண்ட பேரண்டம்  எல்லையற்றுப் பரந்து கிடக்கும் ஒன்று) என்பது (108) நூற்றெட்டுத் திருப்பதி அண்டங்களையும், (243) இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி அண்டங்களையும், (1008) ஆயிரத்தெட்டுச் சீவ (சிவ) அண்டங்களையும், இவை மிதக்கும் பெருவெளிப் பரப்பையும்; உயிரணுப் பெருங்கடல் சூழ்ந்த (108 + 243 + 1008 = 1359) ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்பது அண்டங்களின் இயக்கம், பயிரின உயிரின நிலைகள்.... முதலியவைகளை விளக்கும் விஞ்ஞானமாகும் (The Cosmic Science).

    ‘வானியல்’ [The World = உலகம்] என்பது; இந்த உலகம், இந்த உலகின் இயக்கம், இயக்கத்தின் மூலங்களான இருபத்தேழு விண்மீன்கள் (The Twenty Seven Stars), பன்னிரண்டு இராசிகள் [The Zodiacs], ஒன்பது கோள்கள் [The Nine Planets] ஆகிய நாற்பத்தெட்டின் இயக்க நிலைகள், ஆற்றல் நிலைகள், ... முதலியவைகளை விளக்கும் விஞ்ஞானமாகும் [The Astronomy].

    ‘ஐந்தரம்’, ‘ஐந்திரம்’, ‘ஐந்திறம்’ எனும் மூன்று வகையான நுட்பமான விஞ்ஞானங்கள் விண்ணியலும் [The Cosmic Science], வானியலும் [The Astronomy] பற்றி விளக்குகின்றன. இவைதான், பதினெண் சித்தர்களின் மிக மிக நுட்ப திட்ப ஒட்பப் பகுத்தறிவுப் போக்குகளுக்கும் அறிவியல் சாதனைகளுக்கும், விஞ்ஞானக் கொள்கைகளுக்கும் சான்றாகின்றன, ஊன்றாகின்றன. இவற்றினடிப்படையில்தான் ‘மெய்யான இந்துமதம்’ உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால், பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வடஆரியர்கள் மேற்படி மூன்றையும் சேர்த்துச் சுருக்கமான ஓர் அமைப்பைத் தங்களுக்குத் தெரிந்த சித்தர்கள் [48 வகையினர்] மூலம் உருவாக்கித் தரப் பெற்றிட்டனர். அதுவே, ‘பஞ்சாங்கம்’ எனப்படும். இதனடிப்படையில் பயனற்ற சடங்குகள், சாத்திறங்கள், சம்பிறதாயங்கள், புராண இதிகாசங்கள்.... முதலியவைகளை உருவாக்கி மெய்யான இந்து மதத்தைச் சிதைவும், சீரழிவும், மெலிவும், நலிவும், முடக்கமும், தேக்கமும்.... அடையச் செய்திட்டனர். 

    குறிப்பு:- 

    (a) இந்த ‘விண்ணியல்’, ‘வானியல்’ பேருண்மைகள்தான் இப்போது மெய்யான இந்துமதத்தைப் பிறாமணரின் கற்பனையான பயனற்ற பொய்யான ஹிந்து மதத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. 

    (b) பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதம் அண்ட பேரண்டம் முழுதும் பரவிய; ஆட்சி பெற்றுள்ள ஒன்று என்ற பேருண்மை மேற்படி மூன்று விஞ்ஞானங்களால் விளங்குகின்றன.

    வானிலுள்ள ஒன்பது கோள்களும்தான் இம்மண்ணிலுள்ள பயிரினங்களையும், உயிரினங்களையும் [The Flora and the Fauna] நேரடியாக ஆளுகின்றன. அதாவது 

    1. ஞாயிறு [சூரியன் - Sun], 
    2. திங்கள் [சந்திரன் - Moon or Lunar], 
    3. செவ்வாய் [அங்காரகன் - Mars], 
    4. புதன் [Mercury], 
    5. வியாழன் [குரு - Jupiter], 
    6. வெள்ளி [சுக்கிரன் - Venus], 
    7. சனி [Saturn], 
    8. இராகு [Dragon’s Tail], 
    9. கேது [Dragon’s Head] 

    எனும் ஒன்பது கோள்களும் உணவுத் தானியங்கள் [The Food Grains], பருப்புகள் [Dals and Nuts], எண்ணெய் வித்துக்கள் [Oil Seeds], நவரத்தினங்கள் [Gems], ...  முதலிய அனைத்துக்கும் காரணமாக, இயக்கச் சத்தியாக இருக்கின்றன. 

    The positions and the Movements of the Nine Planets are the main sources and controlling forces of each and everything in this World.

    இன்னும் சொல்லப் போனால், மழை, காற்று, நிலநடுக்கம், நெருப்பால் அழிவு, போர், தலைவர்கள் சாவு, தனிமனிதர் நோய்நிலை, ஓகநிலை.... முதலிய அனைத்துக்குமே இந்த ஒன்பது கோள்களின் நிலைகளும் இயக்கங்களுமே காரணமாகும். எனவேதான் நல்ல நேரம் [Good time or Favourable and auspicious time], கெட்ட நேரம் [Bad Time] என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளிலும் பல வகையான பகுப்புக்களை உண்டாக்குகினார்கள் பதினெண் சித்தர்கள். இது பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்துக்கும் ஏற்றதுதான். 

    “The Pathinen Siddhars invented the facts about the roles and powers of the nine planets. And basing on those facts they founded different methods and varieties of sciences for the welfare and uplift of the human life”. - taken from the writings of His Holiness Siddhar Kaakkaiyar Mr M.Palanisamy Pillai - the 2nd President of the Indu Marumalarchy Iyakkam.

    இதே போலத்தான் மேற்படி ஒன்பது கோள்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறப்பியல் [சாதகம் - Horoscope], வரியியல் [கைரேகை - Palmistry], எண்ணியல் [Numerology], பெயரியல் [Nameology], மனையியல் [A Structural Study of the Buildings], அங்கவியல் [A physiological study].... முதலிய பலவகை அறிவியல்களை ... விஞ்ஞானங்களாகத் தோற்றுவித்து வளர்த்திட்டார்கள் பதினெண் சித்தர்கள்.

    இப்படி ஒன்பது கோள்கள் பற்றிய பேருண்மைகளின் அடிப்படையில் தோற்றுவித்து வளர்த்திட்ட விஞ்ஞானங்கள் அனைத்தையுமே மனித வாழ்வின் மேம்பாட்டுக்கும் உயர்வுக்கும் செம்மைக்கும் உதவும் வண்ணமாகத்தான் படைத்தார்கள். இதுதான் இவர்களின் சிறப்பு. இச்சிறப்பினால்தான் இவர்கள் வழங்கிய ‘இந்துமதம்’ எனும் ‘சித்தர் நெறி’ உலகம் முழுவதும் பரவி நல்லாட்சி நடத்தும் ஒன்றாயிற்று. இன்னும் கூடப் பதினெண் சித்தர்களின் இந்துமதம் ஒரு சமூக விஞ்ஞானமாகவே வாழுகின்றது.

    “The Siddha Philosophy of the Pathinen Siddhars namely The INDUISM attained a world-wide popularity, prominence and prosperity only because of its rationalistic approach and scientific attitude and atmosphere. So much so even today THE INDUISM lives and gets respect as a Social Science....” - taken from the writings of His Holiness Siddhar Kaakkaiyar Mr M.Palanisamy Pillai.

    எனவேதான், இன்றைக்கு மெய்யான இந்து மதத்தில் உள்ள விஞ்ஞானப் பேருண்மைகள் விளக்கி யுரைக்கப் படுகின்றன. 

    இன்றைய இ.ம.இ.யின் தலைவர், குருதேவர், அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், குவலய குருபீடம், இந்துமதத் தந்தை, அரசயோகி, அண்ட பேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், இராசிவட்ட நிறைவுடையார், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் இவரது தந்தையாரால் முழுக்க முழுக்க கணிதமும் விஞ்ஞானங்களும் ஆங்கிலேயர்களின் சூழலில் இளங்கலைப் பட்டம் வரை படிக்க வைக்கப் பட்டார். பிறகுதான், தாய்மொழிப் புலமைக்காக முதுகலையும் (M.A.), பண்டாரகர் (Ph.D.) பட்டத்துக்குரிய ஆய்வுப் படிப்பும் (Research Scholar, U.G.C.) பெறுமாறு செய்யப் பட்டார். 

    தமிழின இயக்கங்களும், தமிழ் நாட்டுச் சமய சமுதாய அரசியல் கலை இலக்கியக் கழகங்களும் தலைவர்களும் பெரும்பாலும் உண்மையான தமிழ் உணர்வும், பற்றும் பாசமும் படிப்புமில்லாத சந்தர்ப்ப வாதப் போக்கையும், தன்னலப் போக்கையுமே கொண்டிருக்கிறார்கள். எனவேதான், இவர் எண்ணற்ற ஆண்டுகளாக எடுத்துக் கூறியும், எழுதியும் வருகின்ற தமிழினம் பற்றிய அரிய பெரிய பயன்மிகு பேருண்மைகள் உரிய பயனை நல்க முடியவில்லை. இவற்றையெல்லாம் எண்ணியே, இவர் இ.ம.இ. என்ற இயக்கத்தையும், அதன் கீழுள்ள பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் புதிய வலிமையும் வளமும் பெறச் செய்ய செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உலக மூலமதமும் முதல்மதமும், தாய்மதமும், அண்டபேரண்டமாளும் மதமுமான மெய்யான இந்துமதத்தின் மூலவர்களான தமிழர்கள்  திராவிடர்கள்  இந்தியர்கள்.... இன்றைக்கு இந்துமதத்தைக் காப்பாற்ற முன் வராமல்; இந்துமதத்தை இழித்தும், பழித்தும், எதிர்த்தும், வெறுத்தும், மறுத்தும், பகைத்தும், ... செயல்படுகிறார்கள். 

    “The Tamils are the aboriginates of the India and they are the first mankind on this hemisphere.” – taken from the writings of His Holiness Siddhar Kaakkaiyar Mr M.Palanisamy Pillai, the 2nd President of the I.M.I.

    இதனால்தான், இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் தன்னம்பிக்கையோ, தன்மான உணர்வோ, இனமான உணர்வோ, மொழியுணர்வோ, இன ஒற்றுமையோ, பண்பாட்டு ஒருமைப்பாடோ பெற முடியாமல் அடிமைப்பட்டும், மிடிமைப் பட்டும் அல்லலுற்று அனாதைகள் போல் வாழுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டி இந்துமதத்தின் மூலம் தமிழகத்துக்கும் தென்னாட்டுக்கும் உலகத்துக்கும் படிப்படியாக நன்மைகளை உருவாக்கவே பகுத்தறிவுப் போக்கிலும், விஞ்ஞானச் சூழலிலும் வளர்க்கப் பட்ட மெய்யான இந்துமதத்தின் அடிப்படைகளான வானியலும், விண்ணியலும் இவை சார்ந்த கலைகளும் விளக்கப்படும் பணி துவக்கப் பட்டுள்ளது.

    ஒன்பது கோள்களில் சுக்கிராச்சாரியார், வியாழ பகவான் எனப்படும் இருவரே குருநிலை பெற்றவர்கள். இராகுவும், கேதுவும் தேவன் என்ற சிறப்பைப் பெற்றவர்கள். திங்களங் கிழவன், செவ்வாய்க் கிழவன், புதன் கிழவன் என்று மூவர் உரிமைப் பட்டம் பெற்றவர். சனீசுவரன் என்ற இவன் ஈசுவரப் பட்டம் பெற்றவன். சூரியன் அனைத்துப் பட்டங்களுக்கும் அப்பாற்பட்டவன். இந்தப் பட்டங்களுக்கேற்பவே இவர்களுடைய ஆற்றல் நிலை, ஆட்சி நிலை, பயன், இயக்கம், ... முதலியவை கண்டு பிடிக்கப் படுகின்றன. 

    இவற்றை இங்கு குறிப்பதற்குக் காரணமென்ன வென்றால் (60) அறுபது ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்களைப் பிறாமணர்கள் சமசுக்கிருதத்தில் மாற்றினார்கள்; மாதங்களின் பெயர்களையும், நாட்களின் பெயர்களையும் கூடச் சமசுக்கிருத மொழிப்படி திருத்தியும் மாற்றியும் செயல்பட்டிட்டார்கள். அதனால், பல அரிய பெரிய பொருளாழமிக்க அழகான தமிழ்ச் சொற்கள் மறக்கடிக்கப் பட்டன, மறைக்கப்பட்டன. எனவே, வானியலிலும், விண்ணியலிலும் இவை சார்ந்த கலைகளிலும் மிகப் பெரிய இழப்புக்கள், அழிவுகள், நலிவுகள், திசை திருப்பல்கள், மயக்கங்கள், குழப்பங்கள், தவறுகள், தேக்கங்கள், ... விளைந்திட்டன. 

    இந்தக் கேடுகளால், பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம் சிதைந்து சீரழிந்து பயன் குன்றிச் செல்வாக்கிழந்தது; அதே நேரத்தில் பிறாமணர்களின் பயனற்ற, பொய்யான ஹிந்துமதம் செழித்து வளர்ந்தது. எனவேதான், சமசுக்கிருத மொழியையும், பிறாமணரின் கருத்துக்களையும் கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயமும், அவசியமும் ஏற்பட்டு விட்டது. பிறாமணர்களும் சேர்ந்தே பொய்யான ஹிந்துமதத்தால் பாதிப்பும் பயனின்மையும், ஏமாற்றமும், கேடும் அடைகிறார்கள். எனவேதான், பொய்யான ஹிந்து மதத்தை அகற்றும் பணியும் மெய்யான இந்துமதத்தை வளர்க்கும் பணியும் சேர்ந்தே நிகழ்த்தப் படுகின்றன. இதைப் புரியாதவர்கள் சித்தர் நெறி பிறாமண வெறுப்பையும் சமசுக்கிருத மறுப்பையும் கண்மூடித் தனமாக வளர்ப்பதாகக் குறைகூறிக் குற்றம் சாட்டுகிறார்கள்.

    பிறாமணர்கள் செய்த மிகப் பெரிய சதிகளில், சூழ்ச்சிகளில், தவறுகளில், புரட்டுக்களில், குழப்பங்களில், மிகப் பெரியது ஆண்டின் பிறப்பு தை மாதமாக இருந்ததை மாற்றியதும்; வாரத்தின் ஏழு நாட்களின் வரிசையை மாற்றியதும், நாள் கோள் மீன் மாதம் ஆண்டு முதலியவைகளின் பெயர்களை மாற்றியதுமேயாகும். விரிவஞ்சி இவைபற்றி அதிகமாக இதில் எழுதவில்லை.

    The mounts of Palm வியாழ பகவான் எனப்படும் தேவகுருவையே வாரத்தின் ஆரம்பமாகவும்; சுக்கிராச்சாரியார் எனப்படும் வெள்ளியையே வாரத்தின் கடைசியாகவும் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்களை வரிசைப் படுத்தினார்கள் பதினெண் சித்தர்கள். அதாவது, மெய்யான இந்துமதப்படி வாரத்தின் ஏழு நாட்கள் 1. வியாழன் - தேவகுரு, வியாழ பகவான் Jupiter, 2. சனி - சனீசுவரன் - Saturn, 3. சூரியன் - ஞாயிறு - Sun, 4. புதன் - புதன் கிழவன் - Mercury, 5. செவ்வாய் - செவ்வாய்க் கிழவன் - Mars, 6. திங்கள் - திங்களங் கிழவன் - Moon, 7. வெள்ளி - சுக்கிராச்சாரியார் - Venus, என்றிப்படித்தான் வாரத்தின் ஏழுநாட்கள் கணிக்கப் பட்டுக் கணக்கிடப்பட்டு வழக்காற்றில் இருந்திருக்கின்றன. இந்த வரிசைதான் மனிதனுடைய உள்ளங்கை அமைப்பை விளக்கும் வரியியல் (The Palmistry) என்ற விஞ்ஞானத்தில் உள்ளது. அதாவது கைரேகைப் பதிவு இலக்கணமும் விஞ்ஞானமும் இப்படியே உள்ளன.

    மேற்படி வரியியல் விஞ்ஞான விளக்கத்தின் மூலம் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம் வாரத்தின் ஏழுநாட்களைத் தேவகுருவில் (‘வியாழக் கிழமை’) ஆரம்பித்து அசுரகுருவில் (‘வெள்ளிக் கிழமை’) முடித்திருக்கும் பேருண்மையை அனைத்துத் துறையினரும் மதத்தினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! ஆராய்ச்சி செய்ய வேண்டும்! இந்தக் குழப்படியால், திருத்தத்தால் பிறாமணர் அடைந்த நன்மைகள் என்னென்ன? எவையெவை? எப்படி யெப்படி? .... ??? ... என்று முறையாகவும் முழுமையாகவும் ஆராய்ந்தால்தான்; பதினெண்சித்தர்களின் சித்தர்நெறியான ‘மெய்யான இந்துமதம்’ எப்படி யெப்படிச் சிதைத்துச் சீரழிக்கப் பட்டுப் பிறாமணரின் பொய்யான ஹிந்துமதம் செழித்து வளர்க்கப் பட்டது என்ற பேருண்மை விளங்கிடும்.

    வாரத்தின் ஏழு நாட்களும் குருவையே முதலாகவும் முடிவாகவும் பெற்றிடுமாறு அமைக்கப் பட்டதற்குத் தத்துவ விளக்கமும் சித்தாந்த விளக்கமும் விஞ்ஞானப் பூர்வமாக உண்டு. எனவேதான், பதினெண் சித்தர்கள் தங்களின் மெய்யான இந்துமதத்தில்; * “அனைத்தும் குருவழிக் காண்க!” * “குருவில்லா வித்தை பாழ்”, * “குருவே திரு”, * “குருவும் திருவுமே கருவாவர்”, * “குருவைப் பெற்றால் திருவைப் பெற்றிடலாம்”, ... என்று அனைத்துக்கும் குருவையே மூலமாக, முதலாக, உள்ளீடாக, உயிராக, உறுதுணையாக .... அமைத்துள்ளார்கள்.

    ஒன்பது கோள்களிலும் வியாழனும் வெள்ளியும் என்ன நிலையில்உள்ளனர் என்பதைக் கணித்து விட்டால் போதும், மற்றவைகளைக் கணித்திடலாம் எளிதாக.

    வியாழனுக்கும் வெள்ளிக்கும் பூசைகள் செய்து பத்தி, சத்தி, சித்தி.... அடைந்திட்டால் மற்ற ஏழுபேரையும் துணையாகப் பெற்றுச் சிறக்க வாழ்ந்திடலாம்.

    குருநிலையே ஒன்பது கோள்களின் இயக்கங்களையும், பயன்களையும் நிர்ணயிக்கும். இந்த இருவருக்கும் உரிய பூசாவிதிகள், அருளூறு பூசாமொழிகள்... ஏராளம்! ஏராளம்! ஏராளம்! ஆனால், தக்க குருவின் வழியாகத்தான் இருவரையும் வணங்க வேண்டும். அதாவது, குருவே இட்டும் தொட்டும் சுட்டியும் விளக்கியருளி உதவினால்தான் மேற்படி வியாழனையும் வெள்ளியையும் சித்தி செய்து கொள்ளமுடியும்.

    மற்றவை குருவழிக் காண்க.

    குவலய குருபீடம்

    குருமகா சன்னிதானம்

    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    12/3/1986.

    தொடர்புடையவை: