Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு>
  • ஞானசித்தர் ஆதிசங்கரன்
  • ஞானசித்தர் ஆதிசங்கரன்

    ஞானசித்தர் ஆதிசங்கரன்

    ‘வெள்ளாடை மேனியான் உச்சிக்குடுமியான்
    தென்பாண்டித் தமிழன், திருமூலர் குருவழி வாரிசு
    திருவாசக தேவார சாரம் கண்டோன்
    வடபுலத்துச் சித்தர் நெறி பரப்பியோன்
    தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்
    சித்தர் இலக்கியம் பிறாமணர் பயில வழியமைத்தோன்
    தென்னக அருட்பேரரசுக்கு உதவியாக வடபுலத்து அருட்பேரரசு கண்டோன்’

    எனக் குருபாரம்பரியம் பாராட்டும் இமயமலைச் சாரலில் நிறைவு கொண்ட ஆதிசங்கரரின் உண்மை வரலாறு.

    மதுரை கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் பற்றிய குறிப்புக்களைப் பலவாறாகத் தொகுத்து நிலக்கோட்டைக்கு அருகிலுள்ள கொண்டையம்பட்டி, கொல்லிமலை, அய்யன்பாளையம், … போன்ற இடங்களில் குகைகளிலும், நிலவறைகளிலும் பாதுகாத்திட்டார். அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து ……

    “… பலமுறை நான்கு சங்கராச்சாரியாரின் பீடங்களுக்கும் சென்றேன். யாருக்கும் இந்துமதத்தைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. இவர்களுக்குக் குருபாரம்பரியம் குறிக்கும் தென்பாண்டித் தமிழன், ஞானசித்தன், உச்சிக்குடுமியான், வெள்ளாடையான், மந்திர சித்தியான் ஆதிசங்கரன் பற்றி ஏதும் தெரியவில்லை. ஆதிசங்கரன் முதலாம் விசயாலயனின் அருளாட்சி முயற்சிக் காலத்தில் வாழ்ந்தவன். தென்னாட்டைக் காவிரியாற்றங்கரைக் கருவூறார் பெளத்தம், சமணம், வட ஆரிய வேதமதம் … முதலியவைகளிலிருந்து காத்திடுவாரென்பது உணர்ந்து அவரின் அருளில் வடநாடு சென்றவனே ஆதிசங்கரன்.

    “இவன் வடநாட்டவர்க்காகவும், வட ஆரியர்களைத் திருத்துவதற்காகவுமே சமசுக்கிருத மொழியில் சித்தர்களின் உண்மையான இந்துமதத் தத்துவத்தை எழுதினான். ஆனால், முதல்யுகச் சிவன், பிறமண், திருமால், முருகன், … முதலியோர்களையும்; இரண்டாம் யுக இராமனையும் அவனோடு தொடர்புடையார்களையும்; மூன்றாம் யுகக் கண்ணனையும் அவனோடு தொடர்புடையார்களையும், … நான்காம் யுகம் பிறந்து இரண்டாயிரமாண்டு கழித்தே இத் திருநாட்டுக்கு வந்த பிறமண்ணினரான பிறாமணர்கள் தங்களுடைய குலத்தவராக, மொழிக்காரராக, வேத மதத்தவராகப் பொய் கூறி உரிமை பாராட்டிக் கதைகளும் புராண இதிகாசங்களும் புனைந்தது போல் ஆதிசங்கரனையும் தங்களுடைய இனத்தானாக ஆக்கி விட்டார்கள்.

    “இந்தப் பிறாமணர்களே ஆதிசங்கரனையும், அருணகிரியையும், மெளனகுருவையும், தாயுமானவரையும்… அழித்தனர். இந்தப் பிறாமணர்களால் வடலூர் அருட்பெருஞ்சோதி அருட்கொடை வள்ளல் பெருமான் அருட்பா வழங்கிய ஞானசித்தன் இராமலிங்கத்தை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும், இவர்கள் மத வெறிகளையும், சாதிவெறிகளையும், தீண்டாமை வெறிகளையும், … தூண்டி விட்டு மக்களை என்றென்றும் ஒற்றுமையின்றிச் சண்டையிட்டு மடிபவர்களாக்கித் தாங்கள் மட்டும் அவர்களின் நிலையான தலைவர்களாகவே இருந்து சுரண்டி வாழ வழிசெய்து விட்டார்கள்.

    “எனவே, சாதிகளை ஒழிப்பதும், மத ஒற்றுமை உருவாக்குவதும், தீண்டாமைக் கருத்தே இல்லாமல் செய்வதும்; பதினெட்டு வகைக் காடுகளிலும் உள்ள நாற்பத்தெட்டு வகையான உருவ, அருவ, அருவுருவங்களைப் புத்துயிர்ப்புச் செய்வதும்; நாற்பத்தெட்டு வகையான கருவறை மூலவர்களையும், அருளாளர்களையும், மருளாளர்களையும் அநுபவப் பூர்வமான அருளூற்றுக்களாக மாற்றுவதுமே, … பிறமண்ணினரான பிறாமணர்களை அடக்கி யொடுக்கி உரிய நிலைக்குக் கொண்டு செல்லும். இல்லையேல், பீடாதிபதிகளின் பூசைகளில் அவிர்ப்பலியாகி அனைத்துத் தமிழின துரோகிகளும், விரோதிகளும் கூண்டோடும் பூண்டோடும் ஒழிய நேரிடும். அதுவே, தவிர்க்க முடியாத நிலை, …”

    “பிறாமணர்கள் ஆதிசங்கரனின் பின்னால் மறைந்து கொண்டு செயல்படுகிறார்கள். ஆதிசங்கரனே தமிழனென்பதையும், ஆதிசங்கரனின் நூல்கள் பதினெண்சித்தர்களின் இலக்கியங்களின் சாரமே யென்பதையும்; அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் குறிப்பிடும் சேரன் மலைப்பகவதி, மூகாம்பிகை, காளி, திரிசூலி, ஈசுவரி, வனக்கிளி, வனராணி, வனதேவி, மலைமகள், மோகினி, தண்டினி, மாயை, … முதலிய அனைத்துச் சத்திகளையும் அரிய தெய்வத் தமிழால் பூசை செய்துதான் சித்தி பெற்றான் என்பதையும்; ஆதிசங்கரனை பிறாமணர்களே அழித்தார்கள் என்பதையும்; சங்க இலக்கியங்களும், திருமூலரின் படைப்புக்களூம், திருவள்ளுவரின் படைப்புக்களும், திருவாசகமும், தேவாரமுமே ஆதிசங்கரனை அருளாளனாக்கின என்பதையும்; காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வாழ்த்தைப் பெற்று வடநாட்டில் இந்துமதம் வளர்க்கச் சென்றவனே ஆதிசங்கரன் என்பதையும் … … வெளிப்படையாக விளக்கித்தான் பிறாமணர்கள் ஆதிசங்கரனைக் கேடயமாகவும், அரணாகவும் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.

    “அப்பொழுதுதான், பிறாமணர்களின் வேதமதக் குழப்பங்களையும், ஆரிய மாயைகளையும் அகற்றி உண்மையான இந்துமதம் என்கின்ற சித்தர் நெறியை மறுமலர்ச்சி பெறச் செய்ய முடியும். அப்பொழுதுதான், வட ஆரியரின் பிடியிலிருந்து இத்திருநாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும்…..”


    தொடர்புடையவை: