Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
  • சிறு தெய்வங்கள் - பகுதி 1.
  • சிறு தெய்வங்கள் - பகுதி 1.

    சிறு தெய்வங்கள் - பகுதி 1.

    பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள், தமிழ்மொழி வளர்க்கவும், காக்கவும், வளவளர்ச்சி செய்யவும் பொறுப்பு ஏற்றிருந்த திங்களங் குலத்து (சந்திர குலத்து) பாண்டியப் பேரரசு மதுரை மாமூதூர் பேரழிவால் சாம்பல் மேடாகிய பிறகு, வாழ்ந்திட்ட காலத்தில் குறித்துள்ள கவலை நிறைந்த, வருத்தம் தோய்ந்த, வெறி மிகுந்த கருத்துக்களே சிறு தெய்வங்களைப் பற்றிய கருத்துக்களை முதன்முதலாக வழங்குகின்றன.

    அதாவது, பதினெண் சித்தர் பீடாதிபதிகளில் இந்தப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் படைப்புக்களில்தான்! சிறு தெய்வங்கள், துட்ட தேவதைகள், மண்ணுலகத் தெய்வங்கள், குருதிப்பலி வாங்கும் தெய்வங்கள், எல்லையில் ஒதுக்கி வைக்கப்பட்ட தெய்வங்கள், பதினெட்டு வகைக் காட்டுத் தெய்வங்கள், 48 வகை வீட்டுத் தெய்வங்கள், 48 வகைக் குல தெய்வங்கள், விண்வெளியில் இருந்து வந்த 48 வகை வழிபடு நிலையினர், 48 வகைக் கருவறை மூலவர்கள், 48 வகைச் சித்தர்கள், 48 வகை அருளாளர்கள், 13 வகை முத்தியாளர்கள், 18ஆம் படிக்கருப்புக்கள்,….. என்று அருளுலக ஆட்சியாளர்கள் பற்றிய விளக்கமான, விரிவான, தெளிவான, முறையான பட்டியல்கள் எண்ணற்றுக் குறிக்கப் படுகின்றன.

    இதற்குக் காரணம் தமிழர்கள் மொழி உணர்வையும், பற்றையும், பாசத்தையும், உரிமையையும், பெருமையையும், நம்பிக்கையையும், விருப்பத்தையும், ஈடுபாட்டையும்,… பிற மொழியினரால் சூழ்ச்சியாக இழக்க நேரிட்டு விட்டால் அருளுலகம் இருண்டு போகும், அருளுலக ஆட்சியாளர்களின் நேரடித் தொடர்பு இல்லாமல் போகும், அருளுலக ஆட்சியாளர்களிடமிருந்து அருளை அநுபவப் பொருளாக அடைய முடியாதவர்களாக ஆகி தமிழர்கள் அருளுலகிலும், பொருளுலகிலும் அடிமையுற்று மிடிமைப் பட்டு இடிபட்ட வாழ்க்கை வாழ நேரிடும் என்று அஞ்சியிருக்கின்றார்.

    ஏறத்தாழ கலியுகம் தோன்றி 1359 ஆண்டுகள் கழித்து (108 + 243 + 1008 = 1359) இந்தியாவுக்குள் புகுந்த வட ஆரியர்கள் வெகுவேகமாக கன்னியாகுமரி முனைவரை பரவி விட்டார்கள். அவர்கள் கூத்தாடிகளாகவும், கோமாளிகளாகவும், கேளிக்கை விருந்தளிப்பவர்களாகவும், காமக் களியாட்டக் காரர்களாகவும், ஆடுமாடு மேய்ப்பவர்களாகவும், காண்போரைக் கவர்ந்திழுக்கும் கட்டழகுப் பால்வண்ண மேனியராகவும் இருந்திட்டக் காரணத்தினால்தான், மாளிகைகள் முதல் மண்குடிசைகள் வரை அவர்களை வரவேற்று வாழ வைத்தன. ஆனால், வாழத் துடித்த வட ஆரியர்கள் நாட்டிலும், ஏட்டிலும் இந்துக்களின் அகவாழ்விலும், புறவாழ்விலும் ஒளியும் வலிவும் பொலிவும் வளமும் செழித்தோங்குவதற்குரிய அடிப்படை என்ன? என்ன? என்ன? என்று ஆராய்ந்தார்கள்.

    நுட்பமதி கொண்ட அவர்கள் பதினெண்சித்தர்கள் படைத்த இந்து மதத்தின் அருளாட்சி அரசாட்சிக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பைப் பல்வேறு வகையில் பிரித்தும், வேறுபடுத்தியும், மாறுபடுத்தியும், முரண்படுத்தியும் சிதைத்துச் சீரழிவுச் செய்ய ஆரம்பித்தனர். அப்பணியின் உச்சக் கட்டத்திற்கு மிகப்பெரிய வசதி வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தவனே வட ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன். இவன், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் அறிவுரைகளையும் மீறி வடநாட்டில் இருந்து குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வட ஆரியர்களை சிறை பிடித்துக் கொண்டு வந்து பாண்டிய நாட்டில் அடிமைகள் ஆக்கினான்.

    புதிதாக வந்த அடிமைகளும், ஏற்கனவே தமிழ்நாடெங்கும் இருந்த அடிமைகளும் (வட ஆரியர்களும்) ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி இந்துமத அருளாளர்களிடையே சிறு தெய்வங்கள், துட்ட (துஷ்ட) தேவதைகள், காவல் தெய்வங்கள், ஊர் எல்லையிலுள்ள தெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், குலதெய்வங்கள்…. இவற்றை யெல்லாம் ஆண்டுக்கொரு முறை கும்பிட்டால் போதும் என்று பரிந்துரைகளை எங்கும் பரப்பி தமிழர்களுக்குக் கிடைத்து வந்த அருளுலகச் சத்திகளை கிடைக்க விடாமல் தடுத்து விட்டனர்.

    இதனால், தமிழர்கள் அருட்கண்ணையிழந்த குருடர்களானார்கள். அருள் உணவை இழந்து பசியால் வாடி வதங்கி மெலிந்தார்கள். அடங்கி ஒடுங்கினார்கள். அடிமையானார்கள். தனிமனித வழிபாடு, அன்றாடம் வீட்டில் நடைபெறும் பூசைமுறை (குடும்ப தெய்வம், இல்லற தெய்வம்), மூத்தோர் வழிபாடு, (நீத்தார் வழிபாடு), குலதெய்வ வழிபாடு (முன்னோர் வழிபாடு, குறிப்பிட்டக் கூட்டத்தாரின் முன்னோர் வழிபாடு), கிராம தெய்வ வழிபாடு…. (குறிப்பு:- தனிமனிதர்கள் நினைத்த நேரம் வழிபடுவதோடு தாங்கள் விரும்பும் தெய்வத்தைக் குருவாகக் கொண்டு வியாழன், செவ்வாய், ஞாயிறு கட்டாயமாக வழிபட வேண்டும். வீட்டுத் தெய்வங்கள் அன்றாடம் மாலையில் வழிபடப்படுவதோடு செவ்வாய், வெள்ளியன்று கட்டாயம் வழிபடப் பட வேண்டும். குலதெய்வங்கள் ஞாயிறு, திங்கள், புதனன்று வழிபடப் படுவது கட்டாயம். ஊர்க் கிராமத் தெய்வங்களை அமாவாசை, மூன்றாம் பிறை, முழு நிலவு, சந்திர கிரகணம், சூரிய கிரகணம்,…. ஆகிய ஐந்து நாட்களில் கட்டாயம் கும்பிட்டேயாக வேண்டும்.

    ஒவ்வொரு பூசைக்கும் எள்ளல் முறை, ஏசல் முறை, அழுகை முறை, தொழுகை முறை என்ற நான்கு முறைகள் உண்டு. இவைகளுக்காக உயிர்ப்பு எழுத்துக்கள், புத்துயிர்ப்பு எழுத்துக்கள், காவல் எழுத்துக்கள் என்பன இருக்கின்றன. இதேபோல் உயிர்ப்பு மந்திரங்கள், புத்துயிர்ப்பு மந்திரங்கள், காவல் மந்திரங்கள் என்பன இருக்கின்றன. - மந்திறம், மந்தரம், மந்திரம், மாந்தரம், மாந்தரீகம் ஆக ஐந்தும் உண்டு - … இவைகளை யெல்லாம் தமிழர்கள் மறக்கவும் துறக்கவும் நுட்பமான செயல்திட்டங்களை உருவாக்கியவர்களே வட ஆரியர்கள்)…. என்று பல்வேறு வகையான வழிபாடு பதினெண் சித்தர்களால் உருவாக்கப்பட்டன. இதுதான் பதினெண் சித்தர்களால் உருவாக்கப்பட்ட கரு. இந்த கருவையே அழித்திட முனைந்து செயல்பட்டார்கள் பிறமண்ணினரான பிறாமணர்கள்.

    தொடர்புடையவை: