Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
  • இந்துமதம் பற்றி M.P.பிள்ளை கருத்து.
  • இந்துமதம் பற்றி M.P.பிள்ளை கருத்து.

    இந்துமதம் பற்றி M.P.பிள்ளை கருத்து.

    இந்துமதத்தவர்கள்தான் தங்களுடைய மதத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்துமதத்தை மறப்பவர்களும், பழிப்பவர்களும், இழிப்பவர்களும், அழிப்பவர்களும், …… மிகுதியாக இருக்கின்றார்கள். இந்துமதத்துக்கு வினோதமாக, வியக்கத் தக்க எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஓர் அரிய ஆற்றல் உண்டு. இந்த அரிய ஆற்றலால்தான் நான்கு யுகங்களாகியும் இந்த இந்துமதம் மட்டும் இறவாமையையும் (Immortality), மக்கள் மறவாமையையும் பெற்று நிற்கின்றது.

    இதற்கு, மற்றொரு காரணமும் உண்டு; அதாவது மனித உணர்வோட்டங்களும், கருத்தோட்டங்களும், கற்பனை யோட்டங்களும் எந்த அளவு உயரிய, நெடிய, தொலைதூர எல்லைக்குச் செல்ல முடியும் என்றாலும் சரி; அந்த அளவையும் கடந்து விஞ்ஞானப் பூர்வமாக (scientifically), மெய்ஞ்ஞானப் பூர்வமாக (religiously or spritually), பகுத்தறிவுப் பூர்வமாக (rationalistically), முறையான முழுமையான (a systematically and completely or properly) வளர்ச்சி நிலைகளைப் பெற்றிருக்கின்றது இந்துமதம்.

    இந்த மண்ணுலகத்தைப் பொறுத்தவரை அரசாங்கப் பூர்வமாக இந்த இந்துமதத்தை அறிவித்து 50 இலட்சம் ஆண்டுகள்தான் (ஆகியிருக்கின்றது). ஆனால், இந்த இந்துமதம் இம்மண்ணுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட காலமோ இதுபோல ஒரு மடங்கு காலத்துக்கும் மேலே இருக்கும். அதாவது, இம்மண்ணுலகில் பயிரினங்களும் உயிரினங்களும் அறிமுகப்படுத்தப் பட்ட காலத்துக்கு முன்பிருந்தே அண்டபேரண்டங்களிலிருந்து இம்மண்ணுலகுக்கு வந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் பல நூறாயிரம் கோடி ஆண்டுகளாக அண்டபேரண்டத்தையாளும் தங்களுடைய மதமான இந்து மதத்தை இம்மண்ணுலகில் பரப்ப முயன்றார்கள். ஆனால், சுமார் ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்துமதத்துக்கென ஓர் அருட்பேரரசு இளமுறியாக் கண்டத்துத் தொன்மதுரையில் உருவாக்கப்பட்டு இந்துமதமும் அரசாங்கப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

    இப்படி இந்துமதம் கணக்கற்ற கோடியாண்டுகளாக வளர்க்கப்பட்ட ஒன்று என்பதால்தான் இந்துமத்தின் எல்லா நிலைகளிலும் முழுமையாயிருக்கின்றது. ஆனால், இது கணக்கற்ற கோடியாண்டு பழமையென்பதால் இதனுடைய எல்லா நிலைகளையும், அதாவது இந்துமதத்தின் புராண இதிகாசங்களும், சாத்திற தோத்திறங்களும், பிற இலக்கியங்களும், வரலாறுகளும், சம்பிறதாயங்களும், பழக்க வழக்கங்களும், பூசைமுறைகளும், கடவுள்களின் நிலைகளும், தோற்றங்களும், வாழ்வியல்களும், …… எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன. இதை எண்ணிப் பார்க்க முடியாதவர்கள்தான் இந்த இந்துமதத்தை மறுப்பவர்களாக, மறப்பவர்களாக, எதிர்ப்பவர்களாக, நகைப்பவர்களாக, இழிப்பவர்களாக, அழிப்பவர்களாக …… மாறுகின்றார்கள்.

    எனவேதான், காலங்கள் தோறும் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றி இந்துமதத்தில் கவிழ்ந்திடக் கூடிய காரிருளையெல்லாம் அகற்றும் பணியில் ஈடுபடுகின்றார்கள்.

    பொதுவாக, இந்து மதத்திலுள்ள கடவுள்களின் வடிவங்களில் பிற உயிரினங்களின் உடல் உறுப்புக்களும், மனித உடல் உறுப்புக்களும் கலந்த புதிய வடிவங்களே நிறைய இருக்கின்றன. இதற்குக் காரணம், அண்டபேரண்டங்களின் அறுவை மருத்துவ வளர்ச்சிதான். அதாவது, இம்மண்ணுலகில் இந்துமதத்தைத் தோற்றுவித்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், அவர்களோடு வந்த பல்வேறு வகைப்பட்ட அண்ட பேரண்டத்தவர்களும் இம்மண்ணுலகத்து உயிரினங்களிடையே எண்ணற்ற அறுவை மருத்துவங்களைச் செய்து புதிய புதிய வடிவங்களையுடைய உயிரினங்களைத் தோற்றுவித்தார்கள்.

    இதேபோல் உயிரினங்களுக்கிடையே இனக் கலப்பு உறவு முறையிலும், விந்துக்களையும் நாதங்களையும் பல்வேறு விகிதங்களில் கலந்து செயற்கைக் கருத்தரிப்பு முறைகளிலும் செயல்பட்டுப் பல்வேறு புதியபுதிய வடிவங்களோடு உயிரினங்களை உருவாக்கினார்கள். இப்படி உண்டாக்கப்பட்ட உயிரினங்களுக்கு இந்துமதத்தின் மூலம் முதன்மையையும், அருளாற்றலையும் கொடுத்தார்கள்.

    எனவேதான், அறிவியல்பூர்வமாகத் தாங்கள் உருவாக்கிய புதிய புதிய உயிரினங்களைப் பற்றிய வரலாறுகளையும், பயன்களையும் பற்றிய பேருண்மைகளையும் வெளியிடாமல் போய்விட்டார்கள். அதனால்தான் இந்தியாவுக்கு வந்திட்ட வேதமதத்தவர்கள் தங்களுடைய விருப்பம் போல் பொருளற்ற கற்பனாவாதக் கதைகளையும், கருத்துக்களையும், செய்திகளையும், புராண இதிகாசங்களையும்…….. உருவாக்கிட்டார்கள். அவற்றால்தான், இந்துமதம் அகற்ற முடியாத இருளைப் பெற்றிட்டது.

    எனவே, வேதமதத்திற்கு என்னென்ன விளக்கங்களைத் தரவேண்டும், அவற்றையெல்லாம் காலக் கணக்கீட்டு அடிப்படையில் வரலாற்றுப் பூர்வமாகவும், இலக்கியப் பூர்வமாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் வழங்குகின்ற பணிதான் இந்துமதத்தின் காரிருளை அகற்றிடும், அகற்றிடும், அகற்றிடும். அம்முயற்சி பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் துவக்கப் பட்டிட்ட போதிலும் அவை நிறைவேற வேண்டியது பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி காலத்தில்தான். எனவேதான், யாம், எமது படைப்புக்களைப் பலவகையிலும் இந்துமதத்தில் படிந்துள்ள காரிருளை அகற்றுவதற்கு உதவும் வண்ணமாக உருவாக்கி வருகின்றோம். எனவே, எல்லோரும் எமது படைப்புக்களைத் தேடிப் பிடித்தாவது படித்தறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துக் கொள்கின்றோம்.

    தொடர்புடையவை: