கேள்வி:- ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்) ஏன்? எப்பொழுது? எதற்காக? ஆளுக்கொரு திசையில் திரும்பிக் கொண்டு இருக்கின்றன?
பதில்:- மெய்யான இந்துமதம் என்று ஒன்று உண்டு. பொய்யான ஹிந்துமதம் என்று மற்றொன்று இருக்கின்றது என்ற பேருண்மையை விளக்குகின்ற சான்றுகளில், ஊன்றுகளில், இந்த ஒன்பது கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருந்த நிலையை மாற்றி ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையில் பார்க்கும்படி செய்யப் பட்டிருப்பதுதான். பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்கள் மெய்யான இந்துமதத்தைச் சிதைப்பதில், செயலற்றதாக ஆக்குவதில், பயனற்றதாக ஆக்குவதில் பெற்ற மாபெரும் வெற்றி. இதனால்தான் ஒன்பது கோள்களும் வெவ்வேறு திசையில் இருக்கின்றன.
அண்டபேரண்டங்களிலிருந்து இந்த மண்ணுலகிற்கு வந்த பதினெண் சித்த்ர்கள் இம் மண்ணுலகின் பயிரினங்களையும் உயிரினங்களையும் ஆட்சி செய்கின்ற ஒன்பது கோள்களும் ஒரே நேர்கோட்டில்தான் இருக்கின்றன என்ற பேருண்மையினை அடிப்படையாகக் கொண்டுதான் ஒன்பது கோள்களுக்காக அமைக்கின்ற பீடங்களையும் சிலைகளையும் ஓம குண்டங்களையும் ஓக குண்டங்களையும் யாக குண்டங்களையும் யக்ஞ குண்டங்களையும் வேள்வி குண்டங்களையும்….. ஒரே நேர்கோட்டில் அமைத்து வழிபடும் பூசை முறைகளையும், மறைகளையும், வேதங்களையும், சித்தாந்தங்களையும், நாதங்களையும், போதங்களையும், ஓதங்களையும் படைத்தார்கள்.
ஆனால், தமிழர்களின் மெய்யான இந்துமதத்தைச் சிதைத்து, சீரழித்து செயலற்றதாக ஆக்கினால்தான்; தாங்கள் இந்து மதத்துக்குரிய நாடான இந்தியாவில் வாழ முடியும் என்று முடிவு செய்த பிறாமணர்கள் மெய்யான இந்துமதத்தின் உயிர் நாடியான ஒன்பது கோள்களின் பூசைகளைப் பயனற்றதாக ஆக்கிடுவதற்காக அவை ஆளுக்கொரு திசையில் பார்த்துக் கொண்டிருக்கும்படி சதுர வடிவில் அமைத்தார்கள்.
இதனை மாற்றுவதற்காகவே பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் ஒன்பது கோள்களையும் நேர்கோட்டில் அமைத்தும் வட்ட வடிவில் அமைத்தும் மறுமலர்ச்சி செய்துள்ளார்கள். இதனைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்படுங்கள்.
(மிகப் பழமையான கோயிலான வைதீசுவரன் கோயிலில் ஒன்பது கோள்களுக்கான பீடங்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதை இன்றும் காணலாம்.)