Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • சித்தர் நெறி சிறு விளக்கம் .
  • சித்தர் நெறி சிறு விளக்கம் .

    சித்தர் நெறி சிறு விளக்கம் .

    சோதிடம், பிறப்பியல், மனையியல், அங்கவியல், கைரேகை, பஞ்சாங்கம், பூசை, தவம், மந்திரம் …. முதலியவை மனித மனத்துக்கு நிறைவையும், சிந்தைக்குத் தெளிவையும், உணர்வுக்கு அமைதியையும், செயலுக்கு உறுதியையும், எண்ணத்துக்கு உரத்தையும், வாழ்வுக்குக் கவர்ச்சியையும் நல்கிடும்! நல்கிடும்! நல்கிடும்! வேறு எதனாலும் இவற்றைப் பெற முடியாது, விலை கொடுத்து வாங்க முடியாது.

    அருளூற்றாகிடும் சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும் மக்களின் தாகங்களைத் தீர்க்கவும்; புறத் தூய்மையைச் சிறக்கச் செய்யவும், அன்பும், அமைதியும், பொறுமையும், நிறைவும், அழகும், மென்மையும், நளினமும், நாகரீகமும், சுத்தமும், ….. மனித வாழ்வில் சிறக்கவும் உழைப்பார்கள்.

    சித்தர்கள் மந்திரவாதிகள் அல்லர், இறைமையின் இருப்பிடங்களே சித்தர்கள். மனித சமுதாயம் ஒற்றுமையோடும், பற்றோடும், பாசத்தோடும், உறவுமுறைகளோடும், உரிமைகளோடும் அமைதியாக வாழ வழியமைத்தவர்களே சித்தர்கள்.

    சாத்திரங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், முறைகள், நெறிகள், ஒழுகலாறுகள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், ……. முதலியவைகளை உருவாக்கிய சித்தர்களின் அடியான்களும், அடியார்களும் ‘பொதுவுடமை’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’, ‘மனிதாபிமானம்’, ‘அன்புநெறி’, ‘அமைதி’, …….. முதலியவை செழிக்கவே பாடுபடுவார்கள். சித்தர் நெறியே பகுத்தறிவு வளர்த்து அகவாழ்வுக்குரிய மெய்ஞ்ஞானத்தையும், புறவாழ்வுக்குரிய விஞ்ஞானத்தையும் செழிப்படையச் செய்யக்கூடிய ஒன்று.

    அனைவரும் வருக! அறிவும் அருளும் பெறுக!

    குருமகா சன்னிதானம் சித்தர் கருவூறார்
    பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி


    தொடர்புடையவை: