Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு>
  • ஆதிசங்கரர் - அத்வைதம்
  • ஆதிசங்கரர் - அத்வைதம்

    ஆதிசங்கரர் - அத்வைதம்

    எங்களுக்குத் தெரியும்! உங்களுக்கு!?……

    (1) அத்வைதம் என்ற பெயரினால் ஏமாற்று!

    மெய்யான இந்து மதத்திற்கு மேல் போக்கான வண்ணப் பூச்சாக உருவாக்கப் பட்டதுதான் பொய்யான ஹிந்துமதம். அனைத்துக்கும் ஒரே பரம்பொருள், அனைத்து உயிர்களுக்கும் ஒரே ஆன்மா என்ற கருத்துக்களை உள்ளிட்ட ‘அத்வைதம்’ என்ற தத்துவம். இந்த ‘அத்வைதம்’ முழுமையான கற்பனை. இந்த அத்வைத வாதிகளோ அனைத்துக் கோயில்களுக்கும் செல்கின்றனர்.

    பாதாதிகேசம் கேசாதிபாதம் என்று அங்கம் அங்கமாக வருணித்து போற்றி வாசகங்கள் கூறிப் பூசை செய்கின்றனர். ஒவ்வொரு கோயிலின் காலம், இறைவனனின் வாழ்க்கை வரலாறு, தோற்றம், வடிவம், … என்றும் பல கூறியும் வருகின்றனர். … இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி?

    (2) காஞ்சி சங்கர மடம் காலடி ஆதிசங்கரர் தொடர்புடையதல்ல!

    ஆதிசங்கரர் இந்தியாவில் நான்கு மடங்களே நிறுவினார் என்பது வரலாறு. இன்றும் கூட, இந்தியாவில் உள்ள (பூரி, காலடி, காசி…) நான்கு சங்கராச்சாரியார்களும் காஞ்சி சங்கராச்சாரியாரை ஏற்பதே இல்லை. தங்களில் ஒருவராகக் கருதுவதுமில்லை. கும்பகோணத்தில் தோன்றிய சங்கர மடச் சத்திரத்தின் தொடர்புடைய 300 ஆண்டு வரலாறு கொண்டதே இன்றைய காஞ்சி சங்கரர் மடம். ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்துக்கும் தொடர்பு இல்லை. ஆதாரங்கள் உள்ளன.

    (3) தமிழ் மடாதிபதிகள் காவியுடை அணிந்தது ஏன்? எப்படி?

    காவியுடையும் துறவறமும்தான் சமய நெறி என்று பொய்யான ஹிந்து மதவாதிகளால் உருவாக்கப்பட்டு விட்டதால் அதை முறியடிக்க வேண்டிய கட்டம் வந்தது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குருவழி வாரிசுகளில் தோன்றிய அகத்தியர் என்பவர் பொய்யான ஹிந்து மதத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டி, மக்களின் போக்கிலேயே சென்று திரும்ப வேண்டி காவியுடையையும் துறவறத்தையும் உண்மையான இந்துமதத்தில் கொண்டு வந்தார். அதன்படி முதன்முதலாக தருமபுர ஆதினத்தை உருவாக்கினார். தன்னிடமிருந்த திருஞானசம்பந்தர் என்பவரை ‘திருஞானசம்பந்த மூர்த்தி’ என்று பட்டம் வழங்கி முதல் ஆதினமாக, மடாதிபதியாக உருவாக்கினார். ஆனால், இம்மடாலயங்களும், மடத் துறவிகளும் ‘வந்த வேலையை விட்டு பந்தக்காலை பிடித்த கதையாக’ உண்மையான இந்துமதத்தின் கருத்துக்களை மக்களிடையே கூறாமல், பொன்னுக்கும் பெண்ணுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு மடத்தினுள்ளேயே மக்கள் தொடர்பற்று வாழ்ந்திட்டனர். இதனால், தமிழர்களின் ஒற்றுமையும், இந்துமதமும் பாழ்பட்டன.

    (4) சமசுகிருதம் பயனற்ற ஒரு மொழி!

    சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தஞ்சை சரபோசி மன்னர் காலத்தில் திருக்கடையூர் கோயிலில் வாழ்ந்த ‘அபிராமி பட்டர்’ என்னும் அருளாளர் தமது ‘அபிராமி அந்தாதி’ என்ற அருட்பாவினால் அமாவாசை நாளில் முழுநிலவைத் தோற்றுவித்தார் என்று வரலாற்றுச் செய்தியே போதும், அருளுலகத்துக்கு பொய்யான ஹிந்துமதமும் சமசுக்கிருதமும் தேவையற்றது, பயனற்றது … என்பது தெரியும்.

    (5) தமிழுக்குத்தான் அருளாற்றல் உண்டு!

    பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ‘ஆதிபராசத்தி’ படத்தில் சமசுகிருதத்தின் ஏமாற்றுத்தனத்தை மிக எளிமையாக விளக்கிக் காட்டினார்கள். அதாவது, ‘ஆதிபராசத்தி’ பூசைக்கு வர வேண்டும் என்று ஆரிய வேத விற்பன்னர்கள் சமசுகிருத மொழியில் பூசை செய்து கொண்டிருக்கும் போது சாதாரண மீனவன் தமிழ்ப்பாடலைப் பாடக் கேட்டு நேரில் தோன்றி அருள் தருகின்றாள். “தமிழ்மொழிக்கு அருளாற்றல் உண்டு, சமசுகிருதத்திற்கு இல்லை” என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டிய உண்மை எத்தனை பேருக்குப் புரிந்தது?


    தொடர்புடையவை: