Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > சொல் விளக்கம் > பத்தி 7

பத்தி 7

இந்து இந்துமதத்தைப் பற்றி முதல் பதினெண் சித்தர் பீடாதிபதியும் மடாதிபதியுமான ஞானாச்சாரியார் ஆதிசிவனாரும் அவரை அடுத்து பதினெண்சித்தர் மடாதிபதி பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற பதினோரு ஞாலகுரு சித்தர் கருவூறார்களும் வழங்கியுள்ள வாசகங்கள் இந்து மதத்தைப் பற்றிய வரலாறுகளையும், நடைமுறைகளையும், ஒழுகலாறுகளையும், மரபுகளையும், சட்ட திட்டக் கட்டுப்பாடுகளையும் வாழ்வியலுக்குரிய உறவு முறைகளையும் உரிமை நெறிகளையும். தெளிவாக, எளிமையாக, விளக்கமாக நேரடியாக விளக்குகின்றன, விளக்குகின்றன, விளக்குகின்றன.

மேலும்

  • 'இந்துமதம் ஒப்புயர்வற்ற முறையான, நிறைவான, வரலாற்றை உடைய ஒரு மதம்',
  • 'இந்துமதம் ஒப்புயர்வற்ற முறையான நிறைவான நடைமுறைகளை உடைய ஒரு மதம்',
  • 'இந்துமதம் ஒப்புயர்வற்ற முறையான, நிறைவான ஒழுகலாறுகளை உடைய ஒரு மதம்',
  • 'இந்துமதம் ஒப்புயர்வற்ற முறையான மரபுகளை உடைய ஒரு மதம்',
  • 'இந்து மதம் ஒப்புயர்வற்ற முறையான நிறைவான வாழ்வியலுக்குரிய உறவு முறைகளையும் உரிமை நெறிகளையும் உடைய ஒரு மதம்',

என்றிப்படிப்பட்ட எண்ணற்ற வாசகங்கள் இந்து வேத நூல்களிலும் இந்து மத நூல்களிலும் ஏராளமாகக் கிடைப்பதால் இந்து மதத்தின் அருமை பெருமைகள், அரிய நிலைகள், பெரிய நிலைகள், சீரிய பயன்கள்... முதலியவை தெளிவாகத் தெரிய வருகின்றன,

ஆனால், இந்த இந்து வேத நூல்களும், இந்துமத நூல்களும் முழுக்க முழுக்க அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியான அருளூறு ஆட்சிமொழியான அருளுறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் இருக்கின்றன.

எனவேதான், காலப்போக்கில் அன்னிய நாட்டவர்களும், அன்னிய மொழிகள் தமிழோடு சேர்ந்து உருவாக்கிய புதிய புதிய மொழிகளும் இந்து மதத்தில் புகுந்து விட்ட காரணத்தினால் தமிழ் மொழியிலுள்ள இந்து வேதம் பற்றிய கருத்துக்களும், அருளூறு பூசை மொழிகளும், பூசை விதிகளும், இந்து மதம் பற்றிய கருத்துக்களும், இவை பற்றிய செய்திகளும் வரலாறுகளும், இலக்கியங்களும், அருட்கலைகளும், அருளுலகத் தத்துவங்களும், செயல் சித்தாந்தங்களும்... இந்துமத வாழ்வு வாழும் இந்துக்களுக்கே தெரியாமல் போய் விட்டது, தெரியாமல் போய் விட்டது, தெரியாமல் போய் விட்டது, தெரியாமலேயே போய் விட்டது.

அதன் பிறகே,

  1. ஐந்தீ வேட்டல், எனப்படும் ஒமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி என்ற பூசை நெறி முறைகளும்,
  2. முத்தீ ஓம்பல் எனும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, எனும் பூசை நெறிமுறைகளும்,
  3. தவம், ஞானம், முதலிய பூசை நெறிமுறைகளும்,
  4. கருவறை, வெட்டவெளிக் கருவறை, வழிபாட்டு நிலையக் கருவறை, கோயில் மூலக்கருவறை எனும் நான்கு இடங்களில் நிகழ்த்தப்பட வேண்டிய பூசை நெறிமுறைகளும்,
  5. குரு, குருக்கல், குருமார், பூசாரி எனும் நால்வரின் பூசை நெறிமுறைகளும்,
  6. புதிதாக வைக்கப்படும் சிலைகளுக்குரிய உயிர்ப்பு, ஆற்றல் குன்றிய அல்லது அருள் நலம் நலிந்த சிலைகளுக்குரிய புத்துயிர்ப்பு... முதலியவற்றைச் செய்வதற்குரிய பூசை நெறிமுறைகளும்,
  7. முடிகயிறு, தாயத்து, சக்கரம், இயந்தரம், இயந்திரம், இயந்திறம், எந்தரம், எந்திரம், எந்திறம். . . முதலியவகைளைத் தயாரிப்பதற்குரிய பூசை நெறிமுறைகளும்,
  8. காற்று, கருப்பு, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, வைப்பு, கழிப்பு, மருந்து, கண்ணேறு முதலியவற்றைத் தடுத்து அகற்றி நலமளிக்கும் பூசை நெறிமுறைகளும்,
  9. பீடம், மடம், ஆதீனம், தம்பிரான், சன்னிதானம், சந்நதி, ஆச்சாரியார், பண்டாரம் முதலியவர்களுக்கு உரிய பூசை நெறிமுறைகளும்...

இந்து மதத்தில் இருந்தும் இல்லாதவைகளாகப் போய்விட்டன. இருந்தும் இல்லாதவைகளாகப் போய்விட்டன, இருந்தும் இல்லாதவைகளாகப் போய்விட்டன.

அதாவது, மேலே குறிப்பிட்ட பூசை நெறிமுறைகள் அனைத்தும் அன்னிய மொழிகளாலும், அன்னியர்களாலும் தெரிந்து கொள்ள முடியாமல் போனமையாலும், புரிந்து கொள்ள முடியாமல் போனமையாலும்தான், காலப் போக்கில் அனைத்தையும் மறுக்கவும் வெறுக்கவும் எதிர்க்கவும், பகைக்கவும், புறக்கணித்து ஒதுக்கவும், இழித்துப் பழித்துக் குறைக்கவும், மறைக்கவும் நேரிட்டு விட்டன, நேரிட்டு விட்டன, நேரிட்டு விட்டன.

இப்படியெல்லாம் அன்னியரும் அன்னிய மொழியினரும் செயல்பட்டிட்ட காரணத்தினால்தான், பிண்டங்களையும், அண்டங்களையும் பேரண்டங்களையும் அண்டபேரண்டங்களையும் ஆளுகின்ற இந்து வேதம்தான் வாழும் இந்துமத இந்தியாவிற்குள்ளேயே தேக்கம் பெற்று, முடக்கம் பெற்று, அடக்கம் பெற்று, ஒடுக்கம் பெற்றுச் செயல்நலம் அனைத்தும் குன்றிச் செத்துப் போன நிலையை அடைந்துவிட்டது.

எனவேதான் இந்துக்கள் இந்துமதத்தின் பூசை நெறிமுறைகளால் தேவைக்கேற்ப அருளை விருந்தாகவும், மருந்தாகவும், அநுபவப் பூர்வமாகப் பெறமுடியாமல் போய்விட்டது. பெற முடியாமல் போய் விட்டது. பெற முடியாமல் போய் விட்டது. பெற முடியாமலேயே போய் விட்டது.

இவற்றால்தான் இந்துக்கள் வேற்று மதங்களையும், மாற்று மதங்களையும் நாடித் தேடி ஒடினார்கள், ஒடினார்கள், ஒடினார்கள், ஒடிக் கொண்டே யிருக்கிறார்கள், ஒடிக் கொண்டே யிருக்கிறார்கள், ஒடிக் கொண்டே யிருக்கிறார்கள்.

இப்படிப் பட்ட ஒட்டத்தை தடுத்து நிறுத்திடும் அக்கறையோ, அறிவோ, ஆர்வமோ, ஆற்றலோ, தரமோ, திரமோ, திறமோ, தீரமோ, உரமோ, அறமோ, மறமோ, வீரமோ உடைய இந்துமதத் தலைவர்களும் இல்லை, தொண்டர்களும் இல்லை, பத்தர்களும் இல்லை.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே