Gurudevar.org
  • அறிமுகம்>
  • பெரியார்
  • பெரியார்

    பெரியார் ஈ.வெ.ரா.

    சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா.

    தமிழர்களின் தன்னிகரில்லாத் தலைவர் தந்தை பெரியார் அவர்களேயாவார். அஞ்சா நெஞ்சமும், அயரா உழைப்பும், அடங்கா ஆர்வமும், அளப்பரிய செயல்திறமும் படைத்த வைக்கம் வீரர் பெரியார் ஒருவரால்தான் தொடர்ந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடிந்தது. அவர் முழு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்று ஆராயத் தேவையில்லை. அவரால், பல அரிய பெரிய உயரிய சாதனைகள் சாதிக்கப் பட்டுள்ளன என்பதை யாருமே மறுக்க முடியாது மறக்க முடியாது.

    இன்று தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு…. என உணர்வுகள் செழித்து வளர்ந்தோங்கி வருவதற்குக் காரணமே தந்தை பெரியார்தான்.

    தந்தை பெரியார்

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.

    பைந்தமிழர் தன்னம்பிக்கையும் தன்மானமும் பெற்றிடப் பகலிரவாய் பசி உறக்கம் பார்க்காமல் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின்Periyaar கனவுகளை நனவாக்குவதே நமது நோக்கம்.

    மேலும் படிக்க...


    இ.ம.இ. கௌரவத் தலைவர்
    சித்தர் நெறியின் வாரிசாக ஈ.வெ.இராமசாமியைத் தயாரித்தவர்கள் காகபுசுண்டர் கரூர் பெரும்புலவர் மருதையா பிள்ளையும் அவர் நண்பர் சுவாமி கைவல்யமுமேயாகும்.

    மேலும் படிக்க...