இந்து மறுமலர்ச்சி இயக்கம்

(பண்பாட்டுக் கழகம்)
தோற்றம்: கி.பி.1772

அருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி

  1.  பதினெண் சித்தர்களின் வாழ்வியல் நெறியான "சித்தர் நெறியே" இந்து மதம். இதில் கலந்து விட்ட மூடநம்பிக்கைகள், மடமைகள், கற்பனைகள்,.... முதலியவற்றை பயிற்சிகள் தருவதன் மூலம் அகற்றுவதே நோக்கம்.
  2.  உலக மதங்களுக்குச் சித்தர் நெறியே தாய்! எனவே, அவரவர் தத்தம் மதவழி வழிபட அநுபவப் பூர்வமான வழிபாட்டு முறைகளைக் கற்றுத் தருதலே நோக்கம்.
  3.  அமைதியுடன், அன்புடன், நிறைவுடன், நிம்மதியுடன் இல்லறம் இனிது அமைய உதவும் ஆன்மீக உணர்வுகளை சித்தர் நெறி மூலம் வளர்க்கப்படுவதே நோக்கம்.
  4.  'சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்' மற்றும் 'உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு' முதலியவற்றை உருவாக்குவதே நோக்கம்.
  5.  சித்தர்களின் ஓகாசன, யோகாசனப் பயிற்சி மூலம் உடல், உயிர், ஆவி, ஆன்மா   முதலியவைகளை வளமாக்குதலும் வலிமையாக்குதலும் நோக்கமாகும்.
  6.  மருத்துவ உலகில் தெரியாமை, புரியாமை, அறியாமை, புதிர்,..... முதலியவை இருப்பதை முற்றிலும் மாற்றிடச் சித்தர்களின் மருத்துவக் கொள்கைகளை அனைவருக்கும் வழங்குதலே நோக்கம்.
  7.  மனித சமுதாய வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள், மாறுபாடுகள், முரண்பாடுகள், குறைபாடுகள், பற்றாக்குறைகள், இயலாமைகள், வறுமைகள், தேக்கங்கள், வீக்கங்கள், முடக்கங்கள்,..... முதலிய அனைத்தையும் முற்றிலும் அகற்றிடச் சித்தர்களின் செய்திச்  செழுமையிலும், கண்ணோட்டத்திலும் உலக வரலாறு, இலக்கியம், கலை, தொழில் முதலிய அனைத்துத் துறைகளையும்  புதுப்பித்து எழுதுதலே நோக்கம்.
  8.  மானுட நலப் பாதிப்புகள், ஊழ்வினை, சூழ்வினை, ஆள்வினை, பாரம்பரியம், நாள், கோள், மீன், இராசி, காற்று, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, கண்ணேறு,... முதலியவைகளின் ஆட்சியால் விளைகின்றன என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் நலம் விளைவிக்க அருட்பணி விரிவாக்கத் திட்ட யாக சாலைகள் மூலம் முயலுதலே நோக்கம்.
  9.  மதம், மொழி, இனம், சாதி, வட்டாரம், கட்சி முதலியவைகளின் பெயரால் நிகழுகின்ற சர்வாதிகாரங்களையும், சுரண்டல்களையும், ஏமாற்றுக்களையும், அடிமை நிலைகளையும் முழுமையாக அகற்றுதலே நோக்கம்.
  10. . நாத்திகத்தாலும், மதமறுப்பாலும், வெறுப்பாலும், பண்பாட்டுத் துரோகத்தாலும், இன விரோதத்தாலும், தாய்மொழிப் பற்றின்மையாலும், நாட்டுப் பற்றின்மையாலும் ஏற்பட்டுவிட்ட இகழ்ச்சிகளை, தாழ்ச்சிகளை, வீழ்ச்சிகளை, இழப்புகளை ஈடுசெய்வதே நோக்கம்.

மேலும் படித்திட...


காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
God Statue
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.