• அறிமுகம்>
 • சித்தர்கள்
 • சித்தர்கள்

  மனித வாழ்வு இந்த மண்ணுலகம் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று முறையான வரலாற்றை எழுதித் தரும் பதினெண்சித்தர்கள், இம்மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்பே விண்வெளியில் உள்ள அண்டங்களிலே தோன்றியவர்களாவார்கள். இவர்களின் பெருமுயற்சியால்தான், இம்மண்ணுலகில் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு முதலிய பல வாழ்வுகள் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்திருக்கின்றன. இன்றைக்கு மேற்கூறிய வாழ்வுகள் எல்லாம் சிதைந்து சீரழிந்து கிடக்கின்றன. இவற்றைச் செப்பனிடுவதற்காகவே மீண்டும் பதினெண்சித்தர்களின் அருளார்ந்த அறிவுக் கொடையை அறிமுகப்படுத்துகிறோம்.

  பதினெண்சித்தர்கள் வழங்கிய அருளார்ந்த அறிவுக் கொடையே சித்தர் நெறி. அது காலப்போக்கில் பல்வேறு சேர்க்கைகளையும் பெற்று இன்றைய இந்து மதமாக விளங்குகிறது. எனவே, சித்தர் நெறியை அறிமுகம் செய்வது, பதினெண்சித்தர்களையே அறிமுகம் செய்வதாகும்.

  பதினெண்சித்தர்களை அறிமுகம் செய்வது இன்றைய நிலையில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை அறிமுகம் செய்வதாகும்.

  பீடாதிபதிகள்

  பதினெண்சித்தர் பீடாதிபதிகள் யார்?

  கடந்த மூன்று உகங்களில், இந்த இந்து மதத்தைக் காலப்போக்கில் ஏற்படக்கூடிய எல்லாவகையான பாதிப்புகளிலிருந்தும், தளர்ச்சி நிலைகளிலிருந்தும், இழப்பு நிலைகளிலிருந்தும் சரி செய்து காத்திட ஒன்பது பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி ஞானாச்சாரியாராகப் பணிபுரிந்திட்டனர்.

  மேலும் படிக்க...


  அரச பாரம்பரியம்

  குமரிக் கண்டத்தில் பதினெண் சித்தர்கள் பஃறுளி ஆற்றங் கரையில் தாங்கள் உருவாக்கிய சமுதாயத் தத்துவத்தின் முதிர்ச்சியான அரசியல் தத்துவத்தைச் செயலுக்குக் கொண்டு வந்து இம்மண்ணுலகின் முதல் அரசு உருவாக்கினார்கள். இந்த அரசு, இம்மண்ணுலகிற்கே தொன்மையான அரசு அல்லது பழமையான அரசு என்ற பொருளில் ‘பண்டைய அரசு’ என்று குறிக்கப் பட்டது. இதுவே பாண்டிய அரசு ஆயிற்று.

  மேலும் படிக்க...


  குருபாரம்பரியம்

  பதினெண் சித்தர்கள் இம்மண்ணுலகின் ஆயுளை 48 பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி நிறைவு பெறுவதுடன் இணைத்துள்ளார்கள். முதலில் இராசிவட்டக் கருவூறார்கள் என்ற 12 பேர்களும், பிறகு முறையே விண்மீன் வட்டத்திற்கு 27 பேர்களும், கோள் வட்டத்திற்கு 9 பேர்களும் தோன்றுவார்கள் என்று குறித்துள்ளார்கள்.

  மேலும் படிக்க...


  11வது பீடாதிபதியின் சாதனைகள் 1
  The father of Induism இமயம் முதல் குமரி வரை இருந்த தமிழின மக்கள் சமுதாயம்  பல்வேறு வகையான சாதி, சமயப் பிரிவுகளால் வேற்றுமைகளையும், வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும், ஏற்ற இறக்கங்களையும், வெறுப்புகளையும், மறுப்புகளையும், போட்டி பொறாமைகளையும், சண்டை சச்சரவுகளையும் பெற்று  எழுச்சி பெற முடியாத வீழ்ச்சிகளையும், உயர்ச்சி பெற முடியாத தாழ்ச்சிகளையும் பெற்றதைக் கண்டு அதன் மீட்சிக்காகத் திட்டமிட்டுச் செயலாற்றப் புறப்பட்ட மாவீரரே காவிரியாற்றங்கரைக் கருவூறார்.

  மேலும் படிக்க...