மோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்

இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

கேள்வி:- ஒன்பது கோள்கள் [நவக்கிரகங்கள்] ஏன்? எப்பொழுது? எதற்காக? ஆளுக்கொரு திசையில் திரும்பிக் கொண்டு இருக்கின்றன?

பதில்:- மெய்யான இந்துமதம் என்று ஒன்று உண்டு. பொய்யான ஹிந்துமதம் என்று மற்றொன்று இருக்கின்றது என்ற பேருண்மையை விளக்குகின்ற சான்றுகளில், ஊன்றுகளில், இந்த ஒன்பது கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருந்த நிலையை மாற்றி ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையில் பார்க்கும்படி செய்யப் பட்டிருப்பதுதான். பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்கள் மெய்யான இந்துமதத்தைச் சிதைப்பதில், செயலற்றதாக ஆக்குவதில், பயனற்றதாக ஆக்குவதில் பெற்ற மாபெரும் வெற்றி. இதனால்தான் ஒன்பது கோள்களும் வெவ்வேறு திசையில் இருக்கின்றன.

அண்ட பேரண்டங்களிலிருந்து இந்த மண்ணுலகிற்கு வந்த பதினெண் சித்த்ர்கள் இம் மண்ணுலகின் பயிரினங்களையும் உயிரினங்களையும் ஆட்சி செய்கின்ற ஒன்பது கோள்களும் ஒரே நேர்கோட்டில்தான் இருக்கின்றன என்ற பேருண்மையினை அடிப்படையாகக் கொண்டுதான் ஒன்பது கோள்களுக்காக அமைக்கின்ற பீடங்களையும் சிலைகளையும் ஓம குண்டங்களையும் ஓக குண்டங்களையும் யாக குண்டங்களையும் யக்ஞ குண்டங்களையும் வேள்வி குண்டங்களையும்..... ஒரே நேர்கோட்டில் அமைத்து வழிபடும் பூசை முறைகளையும், மறைகளையும், வேதங்களையும், சித்தாந்தங்களையும், நாதங்களையும், போதங்களையும், ஓதங்களையும் படைத்தார்கள்.

ஆனால், தமிழர்களின் மெய்யான இந்துமதத்தைச் சிதைத்து, சீரழித்து செயலற்றதாக ஆக்கினால்தான்; தாங்கள் இந்து மதத்துக்குரிய நாடான இந்தியாவில் வாழ முடியும் என்று முடிவு செய்த பிறாமணர்கள் மெய்யான இந்துமதத்தின் உயிர் நாடியான ஒன்பது கோள்களின் பூசைகளைப் பயனற்றதாக ஆக்கிடுவதற்காக அவை ஆளுக்கொரு திசையில் பார்த்துக் கொண்டிருக்கும்படி சதுர வடிவில் அமைத்தார்கள்.

இதனை மாற்றுவதற்காகவே பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் ஒன்பது கோள்களையும் நேர்கோட்டில் அமைத்தும் வட்ட வடிவில் அமைத்தும் மறுமலர்ச்சி செய்துள்ளார்கள். இதனைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்படுங்கள்.

(மிகப் பழமையான கோயிலான வைதீசுவரன் கோயிலில் ஒன்பது கோள்களுக்கான பீடங்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதை இன்றும் காணலாம்.)

 1. [ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ] 
 2. [ அர்ச்சனை என்றால் என்ன? ] 
 3. [ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ] 
 4. [ சம்பிரதாயம் என்றால் என்ன? ] 
 5. [ இந்து என்ற சொல்லின் விளக்கம் ] 
 6. [ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ] 
 7. [ குரு என்ற சொல்லின் விளக்கம் ] 
 8. [ குருவின் அவசியம் ] 
 9. [ தோப்புக் கரணம் என்பது பற்றி ] 
 10. [ வேதம் என்ற சொல்லின் பொருள் ] 
 11. [ பிறணவ மந்திரம் பொருள் ] 
 12. [ கோயில் தேவைதானா? ] 
 13. [ கடவுள் ஒருவரா? பலரா? ] 
 14. [ துறவி என்ற நிலை விளக்கம் ] 
 15. [ துறவறம் உயர்ந்ததா? ] 
 16. [ பிரம்மசரியம் தேவைதானா? ] 
 17. [ கிருஹஸ்தாஸ்ரமம் ] 
 18. [ பெண்ணின்பமே பேரின்பம் ] 
 19. [ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]
 20. [ அரசமர வழிபாடு ] 
 21. [ அருட்சித்தி வழிபாடு ] 
 22. [ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ] 
 23. [ வழிபாட்டில் வலம் வருவது எப்படி? ] 
 24. [ வணங்குதற்கு உரியவர்கள் ] 
 25. [ மார்கழி மாதத்தின் சிறப்பு ] 
 26. [ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ] 
 27. [ பூசையில் தாழம்பூவின் பயன் ] 
 28. [ உருவ வழிபாட்டின் அவசியம் ] 
 29. [ சத்தி வழிபாடு பற்றி ] 
 30. [ சிறு தெய்வங்கள் விளக்கம் ] 
 31. [ திருஞானசம்பந்தர் தமிழரா? பிறாமணரா? ] 
 32. [ திருவள்ளுவர் பற்றி ] 
 33. [ சித்தர் என்ற சொல்லின் பொருள் ] 
 34. [ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ] 
 35. [ ஊனினைச் சுருக்குவது தவறு... ] 
 36. [ யோகாசனம் பற்றி விளக்கம் ] 
 37. [ புராணம் நம்பக் கூடியதா? ] 
 38. [ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ] 
 39. [ மொழி வெறி பற்றிய கருத்து ] 
 40. [ இன்றைய அரசியல் வாதிகள் ] 

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
God Statue
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.