குருபாரம்பரியம் தரும் ஏசு நாதர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள்

(On Jesus the Christ - by Siddhars)

இந்த உலகிலேயே ‘குருபாரம்பரியம்’ என்ற பெயரால் மத வரலாறும் (Religious History), ‘அரசபாரம்பரியம்’ என்ற பெயரால் அரசியல் வரலாறும் (Political History), இலக்கிய பாரம்பரியம் என்ற பெயரால் இலக்கிய வரலாறும் (History of Language and Literature) மிகதJesus் தெளிவான காலக் கணக்கீட்டு முறைப்படி (With a chronological apporoach) எழுதிக் கொடுத்திருப்பவர்கள் பதினெண்சித்தர்கள். ‘இந்த உலக வாழ்வை அல்லது மனித வாழ்வை அல்லது சமுதாய அமைப்பை நிர்ணயிப்பதும், நிர்ணயம் செய்வதும் 1. மதம், 2. அரசியல், 3. இலக்கியம் என்கின்ற முக்கோணக் கோட்டுக்குள் அடங்கிடும் முக்கோண பீடமேயாகும்’ என்று மிகத் தெளிவாக விளக்கி யிருக்கிறார்கள்.

11வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம்:

  குருபாரம்பரியத்தில்தான் ஏசுநாதர் வரலாறு மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் கூறப்படுகின்றது. ஏசுவை ஈசா, ஈசுவரன், ஈசன், தேவகுமாரன், சித்தர் குருவழி வாரிசு, ஞானசித்தர், நவநாத சித்தர், சீவன்முத்தர், ... என்று பல பெயர்ச் சொற்களால் குறிப்பது தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் (கி.பி.785-1040) ஏசுவிடம் எவ்வளவு அன்பும், பற்றும், பாசமும், மரியாதையும், பெருமிதமும் கொண்டிருந்தார் என்ற பேருண்மையை விளக்கிடுகின்றது.

Jesus on Cross“உலகம் முழுவதும் அருளாட்சி அமைக்க ‘அற்புதங்களை’, ‘மாயங்களை’, ‘வியப்புக்களை’, ‘இயற்கை யிறந்த செயல்களை’, ‘அதிசயங்களை’, ... செய்வதன் மூலம் முயற்சித்த ஈசா மாண்டார், மீண்டார், அருளாளர்களை ஆண்டார்...” என்ற குருபாரம்பரிய வாசகம் அருளாட்சி அமைக்க முற்படுபவர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரையாகவே நிற்கின்றது. அதாவது, "ஒரு தனிமனிதன், தன்னுடைய சித்து விளையாடல்களை, ‘அருட்சித்திக் கொடைச் செயல்களை’ மட்டும் நம்பி உலகியலில் பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினால் எதிர்ப்பும், ஏமாற்றமும், ஏளனமும், ஏச்சும், பழியும், அழிவுமே அடைய நேரிடும்" என்ற தத்துவ விளக்கமே குருபாரம்பரியத்தால் வழங்கப் படுகிறது.

இயேசுவின் ஞானத் தந்தை 10வது பதினெண்சித்தர் பீடாதிபதியே!

பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்தான் (கி.மு.100 முதல் கி.பி.150 வரை) தேவகுமாரரான இயேசு நாதரை நேரில் சென்று கண்டு; அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, பதினெட்டாண்டுகள் அவருக்குரிய நிலைகள் அனைத்தும் உணரப் பெறும் நிலைகளை இறைவன் ஆணையால் உருவாக்கி; மீண்டும் அவரை அவருடைய பிறந்த ஊரில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தவர். இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்து உலகம் முழுதும் சுற்றித் தன் தெய்வ வடிவைக் காட்டித் தன்னைத் தேவகுமாரர் என்று மெய்ப்பித்ததற்கு இவரும் சான்றாகிறார்.

“தேவகுமாரர் இயேசு அறியாமை நிறைந்த மக்களால் Jesus, the disciple of Siddhar அழிக்கப்பட்ட போதும் மீண்டும் உடலொடு உயிர்த்தெழுந்து தன் தெய்வ வடிவை உலகோர்க்குக் காட்டினார் ...” என்று எழுதியுள்ளார் இவர். இது பற்றி இரண்டு மூன்று தனி நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

இயேசு தேவகுமாரர்தான், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தது உண்மைதான்...” என்பன போன்ற பல செய்திகள் இக்கருவூறாரால் வாக்குகளிலும் நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.

கி.பி.10ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இயேசுவுக்குக் கோயில்!

தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் இயேசு பற்றிய இச்செய்திகளை ஏற்றுப் போற்றுகிறார். தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தேவகுமாரரான இயேசுவுக்கும்; தேவதூதரான முகம்மது நபி அவர்களுக்கும் தனித்தனிக் கருவறைகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

“... தேவகுமாரர் உலவிய ஊர்கள் தோறும் உலவினேன்...” என்றோர் வாசகம் குருபாரம்பரியத்தில் உள்ளது.

இவர், தனது உலகச் சுற்றுப் பயணங்களில்  தேவதூதரான முகம்மது நபி அவர்களின் சமாதியுள்ள மதினாவுக்கும், புனித தேவாலயம் உள்ள மெக்காவுக்கும், தேவகுமாரர் வாழ்ந்து செயல்பட்ட பாலத்தீன ஊர்களுக்கும் சென்று வழிபாடு செய்திட்டார். இப்படிச் சித்தர்கள் இறைவனின் குமாரரும், தூதரும், அடியாரும் உலகின் எப்பகுதியில் தோன்றினாலும் அவர்களை ஏற்றுப் போற்றி வழிபடும் பொதுவுடமைப் போக்குடையவராகவே வாழ்ந்திருக்கின்றனர் ....

{குருபாரம்பரிய வாசகங்கள் - பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அருளியவை.}

-- From the Book: ‘Immortal Services of Siddhar Karuvooraar’  - written by Gnaalakuru Siddhar Arasayoki Karuvooraar, the 12th Pathinensiddhar Peedam.

கால நிலை விளக்கங்களும் ஊன்றுகளும்:

பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் காலம் கி.மு.100 முதல் கி.பி.150 வரை என்று மிகத் தெளிவாக வரையறைச் செய்யப் படுவதாலும் இவர் வளர்த்த இம்மண்ணுலகின் 47வது தேவகுமாரனாகத் தோன்றிய செருசலத்து ஈசா (Jerusalem Jesus Christ) இவரிடம் ஒன்பது வயது முதல் 27 வயது வரை ஆக 18 ஆண்டுகள் பயிற்சிகள் பெற்ற போது ‘சங்க இலக்கியங்களும், திருக்குறளும், திருவள்ளூவரின் நூல்களும், திருமூலரின் நூல்களும், சித்தர்களின் இலக்கியங்களும், மற்ற நவநாத சித்தர்களின் புராணங்களும், கதைகளும், காதைகளும், கவிதைகளும், கீதைகளும் முறையாகக் கற்றிட்டார்’ என்ற குறிப்பு இருப்பதாலும் திருவள்ளுவரின் காலம் கி.மு.வுக்கு உரியதே ஆகும்.

முதலாம் நூற்றாண்டில் இந்தியா வந்த இயேசுவின் சீடர் புனித தாமசு

பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அமராவதியாற்றங்கரைக்Jesus Christ கருவூறாரின் அருளாணைப்படியும், குருவாணைப்படியும் செயல்படாததால்தான் 47வது தேவகுமாரனான ஈசன் எனப்படும் ஈசா => ஏசா => இயேசு எனப் பெயர் பெற்ற ஏசுநாதர் சிலுவையில் மாண்டு, மீண்டு உயிர்த்தெழுந்தார். அப்படி உடலோடு உயிர்த்தெழுந்த ஏசு, தமிழகத்துக் கரூர் அமராவதியாற்றங்கரை வட்டாரத்தில் நெடுங்காலம் வாழ்ந்தார் என்பதால்தான் இவர் அடியார்களில் சிலர் இந்தியாவுக்கு வந்து தேடிக் கண்டுபிடித்து அவருடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே ‘புனித தாமசு’ (Saint Thomas) ஆவார்.

48வது தேவகுமாரன் ‘அந்திக் கிறித்து’ (The Last Christ) தமிழகத்தில்தான் தோன்றுவார், தமிழினத்தில்தான் தோன்றுவார் என்று மிகத் தெளிவாகக் குறிக்கின்றார்கள்.

இயேசு சிலுவையில் மாண்டதன் உண்மைக் காரணம்:

இந்த 47வது தேவகுமாரன் ஒரு சீவன்முத்தன்; அருவுருவ சித்தியாளன். பிறரை நம்ப வைப்பதற்காகத் தனக்குக் கிடைத்த தெய்வீகச் சத்திகளை யெல்லாம் குருவாணையை மீறிச் செலவிட்டுவிட்ட காரணத்தினால்தான் உடல் சிதைந்து குருதி கொட்டி மூன்று நாட்கள் மரணமென்னும் துக்கத்தில் ஆழ நேரிட்டது என்ற குறிப்பும் குருபாரம்பரியத்தில் உள்ளது.

(குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய “தமிழிலக்கிய வரலாறு” என்ற நூலில் திருவள்ளுவர் காலத்தை தேவகுமாரர் ஈசாவின் காலத்தோடு ஒப்பிட்டு விளக்கிய பகுதியில் உள்ள குறிப்பு.)


மேலும் படித்திட...

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.