இந்து வேத தேவ விளக்கம்

  1. இந்துவேதம் தமிழில்தான் இருக்கின்றது.
  2. இந்து வேத நாடான இந்தியாதான் தமிழ்நாடு.
  3. 'இந்தியா' என்று வட இமயம் முதல் தென் குமரி வரை உள்ள பெருநிலப் பரப்பிற்கு பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்தான்.
  4. இந்தியா, இந்துமதம், இந்துவேதம், இந்து, இந்துக்கள், இந்து வேதியர், இந்துக் கலாச்சாரம் (இந்து + கலை+ ஆன்மீக + சாரம்) .... முதலிய சொற்கள் அனைத்தும் செந்தமிழ்ச் சொற்களே.
  5. வட இமயத்தின் முடி முதல் தென் கோடிக் கடற்கரை மணல் பரப்பு வரை உள்ள அனைத்து வகைப்பட்ட கடவுள்களுக்கும் தமிழ்மொழி மட்டும்தான் தெரியும்.
  6. இந்து மதத்தின் பழமையான கோயில்கள் அனைத்திலும் உள்ள சக்கரங்கள், தகடுகள் அனைத்தும் தமிழ்மொழியில் எழுதப்பட்டவைதான்.
  7. இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் இம் மண்ணுலகுக்கு வழங்கிய 'பதினெண் சித்தர்களுடைய தாய்மொழியும்', 'அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியுமாக' விளங்குவது 'அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிதான்'.
  8. அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் இருநூற்று நாற்பத்தேழு (247) எழுத்துக்களால் இந்துவேத நூல்களும், இந்துமத நூல்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. இவை மட்டுமின்றி எழுபத்தைந்து (75) எழுத்துக்கள் ஒலி வடிவிலும், வரிவடிவிலும் அருட்செல்வங்களை, அருளாற்றல்களை, அருட்சத்திகளை கடவுள்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர்புகளை உண்டாக்கும் ஏந்துகளை, துணைகளை, சாதனங்களை, சத்திகளை.... எல்லாம் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ளன. இப்படித் தமிழ் மொழியில்தான் முன்னூற்று இருபத்திரண்டு (322) எழுத்துக்கள் இருக்கின்றன.
  9. அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் கடவுளைக் காணத் துணை செய்யும், உதவி செய்யும், ஏந்து நல்கும் எழுபத்தைந்து (75) எழுத்துக்கள் இருக்கின்றன.
  10. அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி ஒன்றில் மட்டும்தான் 'மனிதனைக் கடவுளாகவே ஆக்கிடும்', 'அருளாற்றல் ஊற்றெடுக்கும் எழுத்துக்கள்' எழுபத்தைந்து (75) இருக்கின்றன.
  11. இந்து மதத்தில் சிவபதவி, சத்தி பதவி, மாயோன் பதவி, பிறமண் பதவி, தேவர் பதவி, தேவதை பதவி முதலிய பதவிகளில் வாழ்ந்திட்ட கடவுள்களில் பெரும்பாலான கடவுள்கள் தங்களுடைய பதவிக்காலம் முடிந்தவுடன் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் குடி புகுந்துள்ளார்கள். எனவேதான், இந்துவேதத்தில் 1) “தமிழ்நாடுதான் கடவுள்களின் பிறப்பிடம், இருப்பிடம், தாய்நாடு”, 2) “தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் உள்ளங்களும் இல்லங்களும்தான் 'அருளுலக நாற்றங்கால்கள்', 'அருளுலக நாற்றுப் பண்ணைகள்', 'அருளுலக விதைப் பண்ணைகள்'”. 3) “தமிழ்நாட்டில்தான் உலகம் முழுவதும் உள்ள கடவுள்கள் வந்து தங்கி ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெற்ற்ச் செல்லும் 'கரந்தமலை' இருக்கின்றது”.... என்ற பல கருத்துமிகு செய்திகள் வழங்கப் பட்டிருக்கின்றன.
  12. பதினெண் சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் வழங்கியுள்ள இந்துவேதத்தில்தான்; நொடிக்கு நொடி மனிதனுக்கு ஏற்படும் கோடிக்கணக்கான தேவைகளையும், சிக்கல்களையும், தொல்லைகளையும் தீர்த்துத் தர கோடிக்கணக்கில் வகைவகையான கடவுள்கள் இருக்கின்றார்கள் என்ற பேருண்மையை விளக்குகிறார்கள்.
  13. இந்துமதத்தில் கோடிக்கணக்கில் கடவுள்கள் உண்டு.
  14. இந்துமதக் கடவுள்கள் தேடி வந்து பத்தர்களுக்கு உதவுகிறார்கள்.
  15. இந்துமதத்தில் கடவுளைத் தேடிச் செல்பவர்கள் கடவுள்களைக் காண்கின்றார்கள்.
  16. இந்து மதத்தில் மனிதர்கள் கடவுள்களாகவே மாறுகின்றார்கள்.
  17. இந்து மதத்தில் கடவுள்கள் மனிதர்களாக வருகின்றார்கள், பிறக்கின்றார்கள், வாழுகின்றார்கள்.
  18. இந்துமதக் கடவுள்கள் மனித வாழ்க்கையையே வாழுகின்றார்கள்.
  19. இந்துமதக் கடவுள்கள் நோய்க்கு மருந்தும் பசிக்கு விருந்தும் வழங்குகின்றார்கள்.
  20. இந்துமதக் கடவுள்கள் தாயாக, தந்தையாக, குருவாக, தோழனாக, தொண்டனாக, மகனாக.... நேரில் வந்து உதவுகின்றார்கள்.
  21. இந்துமதக் கடவுள்களில் ஆண்கள், பெண்கள், அலிகள் என்று மூவகையினரும் உண்டு.
  22. இந்துமதக் கடவுள்களில் அருவங்கள், உருவங்கள், உருவ அருவங்கள், உருவங்கள் என்று நான்கு வகையினரும் உண்டு.
  23. இந்துமதக் கடவுள்கள் ஊழ்வினை, ஆள்வினை, சூழ்வினை, விதி..... முதலிய பாதிப்புக்களை அகற்றிப் பாதுகாப்புத் தருகின்றார்கள்.
  24. இந்துமதக் கடவுள்கள் 'குடும்ப ஆண்டவர்களாக', 'குல தெய்வங்களாக', 'கிராமத் தேவர் தேவதைகளாக', 'நாட்டுக் கடவுள்களாக', .... பல நிலைகளில் வாழ்ந்து உதவுகின்றார்கள்.
  25. இந்துமதக் கடவுள்கள் முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு எனும் மூன்றையும் விளக்குகின்றார்கள்.

விரிவஞ்சி இந்த இருபத்தைந்து கருத்துக்களோடு நிறுத்திக் கொள்கின்றோம்.