Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 28

பத்தி 28

பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உலக அளவில் இனச் சண்டை, மொழிச் சண்டை, மதச் சண்டை, நாட்டுச் சண்டை எனும் நான்கும் வலுப்பட்டும்; பெரும் போர்கள் நிகழ்ந்து உலக அமைதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் பொழுதுதான் தோன்றிச் செயல்படுவார்கள் என்பதுதான் மரபு.

இப்படித் தோன்றும் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் பெரும்பாலும் தங்களுடைய ஏட்டறிவாலும், பயிற்சி முயற்சித் தேர்ச்சி முதிர்ச்சிகளாலும் உலக மானுட இனத்தைக் காப்பாற்ற முயலுவார்கள், முயலுவார்கள், முயலுவார்கள்.

அம்முயற்சிகளுக்குச் சோதனைச் சாலைகளாக, பயிற்சிப் பள்ளிகளாக, உலைக்களங்களாக. . தங்களுடைய தாய் நாட்டையே பயன் படுத்திடுவார்கள்.

அதில் அவர்கள் எதிர்பார்க்கின்ற வெற்றி கிடைக்காத காரணங்களினால்தான் இந்து வேதத்தை நன்கு தெரிந்த இந்து வேதக் கடவுள்களில் யாராவது ஒருவரை அழைத்து, அவரைத் தங்களோடு உலகம் முழுவதும் சுற்றிக் காணச் செய்து; அதன் பிறகே உலகை அவர்களுடைய காலச் சூழ்நிலைகளில் உய்வித்துக் காப்பாற்றக் கூடிய இந்து வேதக் கருத்துக்களை மட்டும் இந்து வேதம் என்ற தலைப்பில் புதிதாக எழுதித் தரச் சொல்லி வாங்கி அதைப் பரப்புவார்கள்.

ஏனென்றால், பதினெண் சித்தர்களுடைய இந்து வேதம் என்பது பிண்டங்கள், அண்டங்கள், பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் எனும் நான்கினுக்கும் உரிய கோடிக்கணக்கான பிறச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பல நூறாயிரக் கணக்கான தலைப்புகளில் எழுதப்பட்ட மிகப் பெரிய ஒன்றாகும்.

அவற்றிலிருந்து இந்த மண்ணுலகுக்குரிய தம் காலத்திய பிரச்சிகளைகளுக்குரிய தீர்வுகளை வழங்கக் கூடிய இந்துவேதக் கருத்துக்களை மட்டுமே தங்களுக்கு விருப்பமான கடவுள்களின் மூலம் எழுதித் தரப்பெற்று அல்லது எழுதி வாங்கி செயல் பட்டிடுவார்கள், பதினெண் சித்தர்கள்.

இந்த வரலாற்றை விளக்குவனவாக உள்ள குருபாரம்பரிய வாசகங்களில் சிலவற்றை மட்டும் இங்கு எடுத்துக் காட்டுகிறோம்.

குருபாரம்பரிய வாசகங்கள்

  1. "காலங்கள் தோறும் கடவுளர்களாலேயே எழுதித் தரப்படும் வேதமே இந்து வேதம்"
  2. "கடவுளர்களை மண்ணுலகுக்கு வரவழைக்கும் வேதமே இந்து வேதம்”.
  3. "மண்ணுலகத்தவர்கள் விண்ணுலகுக்குச் செல்ல உதவும் வேதமே இந்து வேதம்”.
  4. "கடவுளர்களை மனிதர்களாக வந்து செயல்படச் செய்யும் வேதமே இந்து வேதம்”.
  5. "மனிதர்களைக் கடவுள்களாகிச் செயல்படச் செய்யும் வேதமே இந்து வேதம்”.
  6. "கடவுள்களின் உலகைப் பற்றிய உண்மைகளைக் கடவுள்களே விளக்குகின்ற வேதமே இந்து வேதம்”.
  7. "கடவுளர் உலகத்தோடு தொடர்பு கொள்ள வழியாக, வழிகாட்டியாக, வழித் துணையாக இருக்கின்ற வேதமே இந்து வேதம்”.
  8. "கணக்கற்ற கோடிக்கணக்கான கடவுள்களில் உள்ள அடிப்படையான பதினாறு வகையினர்களையும் பற்றிய பேருண்மைகளை மிகமிகத் தெளிவாக விளக்கியுரைக்கின்ற வேதமே இந்து வேதம்"
  9. "இந்த உலகின் மூல முதல் வேதமே இந்துவேதம்"
  10. "இந்த உலகில் தோன்றக் கூடிய அனைத்து வேதங்களுக்கும் மூலமாக, முதலீடாக, அடிப்படையாக, ஆதாரமாக, உள்ளீடாக இருக்கின்ற வேதமே இந்து வேதம்”.
  11. "அருளுலகப் பொருளுலக இருளகற்றும் வேதமே இந்து வேதம்”.
  12. "மொழி விடுதலை, இன விடுதலை, நாட்டு விடுதலை, மத விடுதலை எனும் நான்கினையும் காத்திடும் ஒரே ஒரு மூல வேதமே இந்து வேதம்”.
  13. "தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கு வாழ்வுகளுக்கும் உரிய உறவு முறைகளையும், உரிமை முறைகளையும், அருமை நிலைகளையும், பெருமை நிலைகளையும் வரையறுத்து விளக்கிக் காத்துத் தரும் ஒரே ஒரு வேதமே இந்து வேதம்”.
  14. "விலங்குகளோடு விலங்குகளாக அலைந்து திரிந்திட்ட மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக்கித் தந்த ஒரே ஒரு வேதமே இந்து வேதம்”.
  15. "மனிதர்களை என்றென்றைக்கும் மனிதப் பண்பாட்டினையும், நாகரிகத்தினையும் போற்றிப் பேணிப் பாதுகாத்து இனிய நல்வாழ்வு வாழச் செய்யும் வேதமே இந்து வேதம்”.
  16. "மனிதப் பிறவியே புனிதப் பிறவி என்று கூறும் வேதமே இந்து வேதம்”.
  17. "கடவுள்களும் மனிதர்களும் இயற்கையாகத் தோன்றியவர்களே என்று கூறும் ஒரே ஒரு வேதம் இந்து வேதம். கடவுள்களும், மனிதர்களும் ஒருவரை ஒருவர் போற்றிப் பேணிப் பாதுகாத்து அன்பு செலுத்தியே வாழுகிறார்கள் என்று கூறும் ஒரே ஒரு வேதமே இந்து வேதம்”.

. . . விரிவஞ்சி இந்தப் பதினெட்டு எடுத்துக் காட்டுகளுடன் நிறுத்துகிறோம்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே