Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 21

பத்தி 21

மேலே குறிப்பிட்டது போல் இந்துவேதம் ஒன்றில்தான் பகுத்தறிவுப் பூர்வமான ஆராய்ச்சிகளைப் பல்வேறு வகையினர்கள் கணக்கற்ற கோடியாண்டுகள் நிகழ்த்திக் கண்டறிந்த உண்மைகள் மிகுதியாக இருக்கின்றன.

இதுமட்டுமல்ல இந்த இந்து வேதத்தில்தான் இந்து வேதத்தின் அருளுலகத்தவர்களான

  • பதினெண் சித்தர்கள்,
  • 48 வகை சித்தர்கள்,
  • 48 கடவுள்கள்,
  • 48 வகைப்பட்ட வழிபடு நிலையினர்கள்,
  • 48 வகையான அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள்,
  • 48 வகையான மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள்,
  • 48 என்ற எண்ணிக்கைக்கு உட்பட்ட ஆச்சாரியர்கள், தோன்றிடக் கூடிய எண்வகை ஆச்சாரியார்கள், பதினான்கு வகைப்பட்ட குருவழி ஆச்சாரியார்கள், 14 வகைச் சித்தியாளர்கள்

முதலியோர் அனைவரையுமே எவர் வேண்டுமானலும் முறையான பயிற்சி முயற்சிகளால் காண முடியும், காண முடியும், காண முடியும் என்றும்; கண்ணால் காண்பவர்களோடு எல்லா வகையான தொடர்புகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும் அல்லது வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் மிகத் தெளிவான செயல்முறைகளைப் பெற்றிருப்பதுதான் இந்துவேதம்.

இவற்றால்தான் இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய மூலப் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இந்து வேதத்தால்தான் அருளுலகப் பொருளுலக இருள்களுக்கும், இன்னல்களுக்கும் முடிவு காணப்பட்டு விடிவு உருவாக்கப்படும் என்று அழுத்தந் திருத்தமாக, ஆணித்தரமாகக் குறிக்கப் படுகிறது.

இப்படி இந்து வேதம் எல்லா வகையான செல்வங்களையும் வழங்குகின்ற ஒர் ஒப்புயர்வற்ற தனிப்பட்ட அண்ட பேரண்டங்கள் அனைத்திலும் பரவிய மாபெரும் வேதமாக இருக்கின்ற காரணத்தினால்தான்; இதனுடைய தொடர்பும், அடிப்படையும், உதவியும், உள்ளீடும்... இல்லாமல் எந்த ஒரு வேதமும் எந்த உலகத்திலும் சரி தோன்ற முடியாது, தோன்ற முடியாது, தோன்ற முடியாது, தோன்றவே முடியாது என்ற கருத்து முடிவாகக் கூறப்படுகிறது.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே