Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 19 > பின்குறிப்பு

பின்குறிப்பு:

(இந்த நகரின் நினைவாகத்தான் கடல்கோள்களால் தென் இமயமலையும் மேற்படி ஆறுகளும் அழிந்த பிறகு தோன்றிய வடஇமய மலையில் தோன்றிய ஆறுகளும் வடகங்கை வடயமுனை வடஇந்து (சிந்து) வடப் பிறம்ம புத்திறம் , , . முதலிய ஆறுகளின் இடங்களில் இதே பெயரை உடைய அதாவது மோகஞ் சிதறா என்ற பெயரை உடைய நகரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு சிந்து என்று சொல்லப்படும் வடஇந்து ஆற்றங்கரையில்தான் புதையுண்ட மொகஞ்சோதாரோ எனப்படும் மோகஞ் சிதறா நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. மற்ற மூன்று ஆற்றங்கரை களிலிருந்து நகரங்கள் இன்றும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதைப் போலத்தான் இந்த மோகஞ் சிதறா நகருக்கு அருகில் பதினெண் சித்தர் மடமும் பீடமும் தோற்றுவிக்கப்பட்ட அருட்பா நகர் இருந்திட்டது. இப்போது புதைபொருள் ஆராய்ச்சியால் வடசிந்து ஆற்றங்கரையிலேயே மொகஞ்சதாரோ நகரையொட்டியே அரப்பா நகராகக் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அதாவது பதிணென் சித்தர்களும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளும் இந்த உலகில் முதன் முதல் தோன்றிய மிகப் பெரிய நிலப்பரப்பான இனமுறியாக் கண்டம் மூன்று கடல்கோள்களால் கடலுக்குள் ஆழ்ந்து அழிந்த போதிலும் அவற்றின் நினைவாகவே அக்கண்டத்திலிருந்த மலைகள், ஆறுகள், காடுகள்.. . முதலியவற்றின் தூய செந்தமிழ்ப் பெயர்களையே புதிதாகத் தோனறிய வட இமயமலை முதல், வடவேங்கடம் வரையுள்ள நிலப்பரப்பிலுள்ள மலைகளுக்கும், ஆறுகளுக்கும், காடுகளுக்கும் பெயரிட்டார்கள்)

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே