Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • மதங்களின் தாய்
  • மதங்களின் தாய்

    மதங்களின் தாய்

    இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே - பகுதி 2

    எனவே, நாம் இதுவரை மதத்துறையை இழித்தும் பழித்தும், சிதைத்தும் சீரழித்தும் வளவளர்ச்சியும் ஆட்சியும் பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்து வந்த அனைத்துத் துறைகளையும் நேர்மையோடு நேரடியாக விமர்சித்து மதவிடுதலைக்கான போராட்டத்தைத் துவக்கியேயாக வேண்டும். இது ஓர் உலகந் தழுவிய போராட்டமாகவே வளர்ச்சி பெறும்! வளர்ச்சி பெறும்! வளர்ச்சி பெறும்! எனவே, உலக மதங்களனைத்துக்கும் மூலமாகவும், முதலாகவும், தாயாகவும், தலைமையாகவும், வழியாகவும், வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும், கருவூலமாகவும் இருப்பதுதான் சித்தர் நெறியெனும் நமது மெய்யான இந்து மதம் (The True Induism is the Mother of all the Religions on this hemisphere). எனவேதான் ஒரு தாய் தன்னுடைய சேய்களைக் காப்பற்றுவதுபோல் நாம்தான் உலக மதங்களனைத்தையும் நாத்திகர்களிடமிருந்தும் மத விரோத துரோகச் சத்திகளிடமிருந்தும் தன்னல வெறிபிடித்த மதப் போலிகளிடமிருந்தும், கூலிகளிடமிருந்தும், காலிகளிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்றவேண்டும்!

    நண்ப! மத விரோத துரோகச் சத்திகளின் ஈனச் செயல்களால்தான் நாத்திகர்கள், பகுத்தறிவு வாதிகள், சீர்திருத்த வாதிகள் என்பவர்கள்; ‘மதம் ஒரு மடமை’; ‘மதம் ஒரு கற்பனை’; ‘மதம் ஒரு கனவு’; ‘மதம் முன்னேற்றத்துக் தடை’; ‘மதம் பயனற்றது’; ‘மதம் தேவையற்றது’; ‘மதம் அறிவுக்குப் புறம்பானது’; ‘மதம் புரியாத ஒன்று’; ‘மதம்தான் முதலாளித்துவத்தை வளர்க்கின்றது’; ‘மதம்தான் ஏழைகளை அடங்கியடுங்கி ஏழைகளாகவே இருக்கச் செய்கிறது’; ‘மதம்தான் அடிமையுணர்வை வளர்க்கிறது’; ‘மதம் மனநோயாளிகளை உருவாக்குகிறது’; ‘மதம் கோழைகளை வளர்க்கிறது’; ‘மதம் ஆபாசங்களை வளர்க்கிறது’; ‘மதம் காட்டுமிராண்டித் தனங்களைக் காப்பாற்றுகிறது’; ‘மதம் மக்களை மயக்கும் ஒரு மயக்கப் பொருள்’; ‘மதம் சமுதாய விழிச்சிக்கும் எழிச்சிக்கும் தடையாக இருக்கிறது’; ‘மதம் உருவாக்கும் மதவெறிகளால்தான் அரசியலிலும், சமுதாயத்திலும் அமைதியின்மை விளைகின்றன’; என்பன போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து மதத்தின் மீது சுமத்த முடிகிறது. இதனை நன்கு தெரிந்தும், ஆராய்ந்தறிந்தும்; முழுமையாக புரிந்தும், முறையாக உணர்ந்துமே ….. செயல்படப் புறப்பட்டிருப்பவர்கள் நாம் என்ற விழிப்புணர்வும், நம்பிக்கையுணர்வும் நம்மிடையே எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். இருக்க வேண்டும், இருக்க வேண்டும். இப்பேருண்மைக்கேற்பவே நமது கருகுலத்திலும், குருகுலத்திலும், அருட்பணி விரிவாக்கத் திட்ட நிலையங்களிலும் ஆய்வுக் கூட்டங்களிலும்…… முறையான பயிற்சிகள் முழுமையாக வழங்கப் படுகின்றன, வழங்கப் படுகின்றன, வழங்கப் படுகின்றன, என்பதனை நம்மவர்களாவது நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, குருதேவராகிய யாம், நம்மவர்களையெல்லாம் மத விடுதலைப் போராட்டத்திற்காக மாவீரர்களாகத் தயாரிக்கிறோம் என்பதைப் புரிந்து கொல்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது நிறுவன நிருவாகக் கட்டமைப்புக்களிலும் நடவடிக்கைகளிலும் எமது நோக்கும் போக்கும் ஊக்கும் கண்டிப்பு மிக்கவைகளாக கடுகடுப்பும் சிடுசிடுப்பும் உடையவைகளாக ஈவு இரக்கமற்ற விமர்சனங்களை வழங்குபவைகளாக நெருப்பாறு ஓடுவது போல் இருப்பதனை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு தங்களைப் போன்ற முன்னணித் தளபதிகளும் வீரர்களும் (ஆண், பெண் இருபாலரும்) எமக்குதவி செய்ய வேண்டும். உற்ற துணையாக இருக்க வேண்டும்.

    நண்ப! மதத்துறையில் வாழும் ஒரு சில தனிமனிதர்கள் சுயநலத்தாலோ, உலகியலினாலோ தவறுகளைச் செய்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம், முதலிய துறைகளைச் சார்ந்தவர்கள் தவறுகளையும், குற்றங்களையும் செய்வதற்காகவே வாழுகிறார்கள். அதாவது, மதத்துறையில் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவர்தான் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம் முதலிய துறைகளில் தவறு செய்யாதவர்கள்தான் நூற்றுக்கு ஒருவர் இருவர் என்றிருக்கிறார்கள். இந்தப் பேருண்மையை ஆபாசப்படுத்தாமல், பிறர் மனம் புண்படாமல், தேவையற்ற ஆரவாரம் இல்லாமல்…. மிகமிக நயமாகவும், நாகரீகமாகவும் அனைவருக்கும் எடுத்துக் கூறியே நமது மத விடுதலைப் போராட்டப் படையை உருவாக்க வேண்டும், உருவாக்க வேண்டும், உருவாக்க வேண்டும். இதுவே எமது நிலை! நமது நிலை!

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கை 28இலிருந்து

    தொடர்புடையவை: