உலககுரு சகடகுரு

உலக குரு, சகட குரு என்று பதினெண் சித்தர்களால் குறிக்கப்படும் சொற்கள் சமசுக்கிருதத்தில் லோககுரு, ஜகத்குரு என்று இன்றைய காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்களால் குறிக்கப்படுகின்றன.

உலக குரு விளக்கம்:

உலகம் = இம்மண்ணுலகைக் குறிக்கிறது.

உலக + குரு --> லோக குரு

இம்மண்ணுலகப் பயிரின உயிரினங்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து அநுபவிக்க வழிகாட்டியாக இருப்பவர்.

மண், பெண், பொன் ... அனைத்தையும் ஏற்று அநுபவிப்பவரே.

சகட குரு விளக்கம்:

சகடம் = இயங்கிக் கொண்டே இருக்கும் இம்மண்ணுலகமும் மானுட வாழ்வையும் குறிக்கும்.

இம்மனித வாழ்வைத் தாங்கிச் செல்லும் வண்டி போன்று இருப்பவரைக் குறிக்கும்.

சகட + குரு --> சகத்குரு.

இப்பொருளிலேயே பதினெண்சித்தர்கள் ஆதிசிவாச்சாரியார், ஆதிபரமாச்சாரியார், ஆதிசங்கராச்சாரியார், ஆதிஈசுவராச்சாரியார் எனும் நான்கு ஆச்சாரியார்களுக்கு மட்டுமே உலககுரு, சகத்குரு என்ற பட்டங்களை வழங்கியுள்ளனர்.

இதைப் புரிந்து கொள்ளாமல் பிறாமணர்கள் தங்களின் கற்பனையான துறவுக் கோலக் காலடி ஆதிசங்கராச்சாரியாரைப் பின்பற்றித் தோற்றுவித்துக் கொண்ட ஆச்சாரியார்களுக்கும் உலககுரு --> லோககுரு, சகட குரு --> சகத்குரு = ஜகத்குரு என்று சமசுக்கிருத மொழி ஒலிக்கேற்ற ‘லோககுரு’, ‘ஜகத்குரு’ என்ற சொற்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

குறிப்பு:-

ஆனால், துறவியாக, பிரம்மச்சாரியாக வாழும் இன்றைய சங்கராச்சாரியார்கள் தங்களை லோககுரு (உலககுரு), ஜகத்குரு (சகட குரு) என்று குறிப்பது தவறே! கேலிக் கூத்தே!


மேலும் படித்திட...


காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
God Statue
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.