ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து


    புத்தாண்டு ஆங்கிலேயருடையது, அவணியெல்லாம் விழாவாகிறது.
    எத்திசையோரும் ஏற்றுப் போற்றுவது போலவே போற்றுகிறோம்.
    இத்திருநிலை தமிழ்ப் புத்தாண்டு பெற்றிடவே ஏற்போம் உறுதி
    நினைத்தவர் வதைத்துத் துவைத்து அழித்திடத் தமிழினம்
    இத் தரணி யெலாம் கூலியாய் ஏமாளியாய் வேலியிலாப் பயிராய்
    இனத்துரோகி விரோதி கங்காணிகளால் வாழ்வதைத் தடுப்போம்
    தன்னலப் போலிக் கூலித் தலைவர்களே தமிழின வீழ்ச்சி தாழ்ச்சி
    என்றுணர்ந்தே கருவறை ஊழியரான பூசாறி, பட்டர், குருக்கள்
    என்போரனைவரும் திரட்டி அருட்போரால் இருளகற்ற ஒளியேற்றப்
    புத்தாண்டில் உறுதி பூண்போம் ஒத்துழைப்பீர் ஏந்து நல்குவீர்.  

-- ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் எழுதிய கவிதை